சென்னை, பிப்.26- சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் விளையாட்டு போட் டிக்கு வருகை தந்த காவல்துறை அதி காரியை மாணவர்கள் திருப்பி அனுப் பினர். பரமக்குடியில் தலித் தலைவர் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளன்று அஞ்சலி செலுத்த கூடிய மக்களை விரட்டி அடித்து காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி னர். இதில் 6 தலித் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரி செந்தில்வேலன். அவர் சனிக்கிழமை யன்று ( பிப்.25) லயோலா கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப்போட் டிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக் கப்பட்டிருந்தார். ஆனால் இதையறிந்த கல்லூரி மாணவர்கள் அவரை கல்லூரிக்குள்ளே நுழைய விடாமல் நுழைவாயில் அரு கேயே திருப்பி அனுப்பினர். மாணவர் களது போராட்டத்திற்கு கல்லூரியின் ஊழியர்களும் ஆதரவு தெரிவித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் போராட்டம் காரண மாக விளையாட்டு விழா சிறப்பு அழைப்பாளர் இல்லாமல் நடை பெற்று முடிந்தது.

Leave A Reply

%d bloggers like this: