ஜோகன்னஸ் பர்க், பிப். 26 – நெல்சன் மண்டேலா வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். 93 வயதான மண்டேலாவின் உயிருக்கு ஆபத்தில்லை என் றும் அவர் திங்கட்கிழ மைக்குள் வீட்டுக்கு அனுப் பப்படுவார் என்றும் தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் கூறினர். தென் ஆப்ரிக்காவின் தந்தை என்று அழைக்கப்ப டும் நெல்சன் மண்டேலா வெகுநாட்களாக அடிவயிற் றில் ஏற்படும் வலியால் அவதியுற்று வருகிறார். அவர் குடல் இறக்க நோய்க் காக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் என்று அதி கார வட்டாரங்கள் தெரி வித்ததாக பிபிசி கூறுகிறது. “அவருடைய உடல் நிலை குறித்து மருத்துவர் கள் திருப்தி தெரிவித் துள்ளனர். அவருடைய வய துக்கு இதுபோன்ற நிலை மைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறி னர்” என்று தென் ஆப் பிரிக்கா ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அலுவலகம் வெளி யிட்ட அறிக்கை கூறுகிறது. மருத் துவமனையில் அனுமதிக் கப்படும் முன் அவர் நல்ல நிலையில் இருந்தார். அவரு டைய நோய் குறித்து ஆழ மான சோதனை தேவைப் படுகிறது என்று மருத்து வர்கள் கூறினர் என்றும் அறிக்கை சொல்கிறது. அவருடைய குடும்பத்தா ரை தனிமையில் இருக்க விடுங்கள் என்றும் அறிக் கை வேண்டுகோள் விடுத் துள்ளது. அவர் எந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்று அறிக் கை கூறவில்லை. தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையாக இருக் கக்கூடும் என்று ஊகங்கள் வந்த வண்ணம் உள்ளன. தொழிற்சங்கம் கவலை மண்டேலா மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டுள்ள செய்தி குறித்து தென்ஆப்ரிக்க தொழிற் சங்கங்களின் காங்கிரஸ் கவ லை தெரிவித்துள்ளது. அவர் விரைவில் முழு குண மடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.