திருநெல்வேலி, பிப்.26- நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த இலத் தூர் அருகே உள்ள சீவ நல்லூரைச் சேர்ந்தவர்கள் நெல்லை டவுணில் ஞாயி றன்று நடைபெற்ற சித்தா டாக்டரின் இல்ல வளை காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் இண் டிகா காரில் ஊருக்கு திரும் பிக்கொண்டு இருந்தனர். கார் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் முன் பாக உள்ள குளக்கரை திருப்பம் அருகில் சென்ற போது, பாவூர்சத்திரம் ரைஸ் மில்லில் நெல் மூடை களை இறக்கி விட்டு காலி யாக வந்த மினி லாரி கண் ணிமைக்கும் நேரத்தில் கார் மீது மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி அருகில் உள்ள வயல் வெளியில் சரிந் தது. இதில் காரில் இருந்த ஆறுமுக களஞ்சியம்(90), ஜெயக்குமாரி (40), செல்வி (25), காளீஸ்வரி (13) என 4 பெண்களும், அம்மையப் பன் (55), ஹரீஷ்(10), கௌ தம் (8) ஆகிய 7 பேருடன் காரை ஓட்டி வந்த அம்மை யப்பனின் உறவினரான டிரைவர் பாலாவும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் கீழபித்த னேரி வேல்முருகன் மற்றும் காரில் வந்த ஆசிரியர் காளி முத்து ஆகிய 2 பேரும் பலத்த காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங் குளம் போலீசார் உடல் களை மருத்துவ பரிசோத னைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply