தூத்துக்குடி, பிப்.26- தூத்துக்குடி கப்பல் ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.5லட்சம் நகை கொள்ளையடிக்கப் பட்டுவிட்டது. தூத்துக்குடி லயன்ஸ்டவுனில் வசித்து வருபவர் ஹென்றி பெர்னாண்டோ. இவரது மனைவி நேவிஸ் அம்மாள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள் ளன. ஹென்றி கப்பலில் வேலை பார்த்து வருவதால் அவரது மனைவி இரு குழந்தைகளுடன் வீட்டில் தனி யாக இருந்து வந்தார். இரவு மட்டும் தூங்குவதற்கு தனது குழந்தைகளுடன் சகாயபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்று விடுவாராம். வெள்ளியன்று முன்தினம் இரவு தனது தாயார் வீட் டிற்குச் சென்ற நேவிஸ் அம்மாள் சனிக்கிழமை காலை வீட்டிற்கு வந்தார். அங்கு வீட்டின் பூட்டுக்கள் உடைந் திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்த போது, அங்கு வைக்கப் பட்டிருந்த தங்க நகைகளான கவர்னர் மாலை, நெக்லஸ், வளையல் உள்ளிட்ட 23.5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.இதன் மதிப்பு ரூ.5லட்சம் ஆகும். இதுகுறித்து தென்பாகம் போலீசில் புகார் அளிக் கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், இன்ஸ் பெக்டர் ரகுநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நகை கொள்ளைக்காக 23 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில், ஒரு வழக்குகளில் கூட குற்றவாளி கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரி யவருகிறது. தூத்துக்குடியில் குற்ற வழக்கிற்காக தனி போலீஸ் நிலையம், அதற்கு இன்ஸ்பெக்டர்கள், சப். இன்ஸ்பெக்டர்கள் என தனிப்படை போலீசார் செயல் பட்டு வந்தனர். கடந்த ஆண்டு குற்ற வழக்கு காவல் நிலையத்தை அந்தந்த காவல் நிலையங்களோடு இணைத்து, இங்கு பணியாற்றி வந்த காவலர்களையும் இடமாற்றம் செய்துவிட்டனர். இதனால் குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் இல்லாததால், போலீசார் திணறிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தூத்துக்குடியில் அதிக அளவில் கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருவதால் மாவட்ட எஸ்.பி. குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க தனிப்படை போலீசாரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க் கிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.