நாகப்பட்டினம், பிப்.26- கடுமையான மின்வெட் டினால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிப்பதும், பட்டினி கிடப்பதும் குளுகுளு அறை யிலேயே நாள்முழுவதும் வீற்றிருக்கும் முதல்வருக்கு தெரியுமா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத் தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி கூறினார். நாகை மாநாட்டுப் பொதுக்கூட் டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: மக்கள் ஒரேயடியாக அதிர்ச்சியடைந்து விடக் கூடாது என்பதற்காக இரு தய நோயாளிகளுக்குப் போதிக்கப்படுவதைப் போல, முதல்வர் படிப்படியாக நம் மீது சுமைகளை ஏற்றி பதப் படுத்திக் கொண்டிருக்கி றார். ஏற்கனவே பால்விலை, பேருந்துக் கட்டண உயர் வைத் தொடர்ந்து மின் கட்டணமும் உயர இருக்கி றது. இது போதாதென்று மின்வெட்டு நேரத்தையும் படிப்படியாக உயர்த்திக் கொண்டிருக்கிறார். இத னால் லட்சக்கணக்கான தொழிலாளர் கள் வேலை களை இழந்து சாப்பாட் டிற்கே பறிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட் டும் பெண்கள் மீதான வன் முறை 15 சதம் அதிகரித்துள் ளது. பெண்கள் காதலிக்க மறுத்தால் வாலிபர்களால் கொலை, காதலித்தால் பெற் றோரால் கவுரவக்கொலை, தனியாக நடந்தால் பாலியல் வன்முறையால் கொலை, சும்மா வீட்டில் இருந்தா லும் நகைக்காகக் கொலை என நாலாபுறமும் பெண் கள் மீதான கொலைகள் அதிகரித்துக் கொண்டேயி ருக்கிறது. ஒரு பெண்ணாக இருக்கும் முதல்வருக்கு இவற்றின் மீது ஏதாவது அக் கறை உண்டா? மாற்றுத் திறனாளி களின் நிலையும் படுமோச மாக உள்ளது. மாற்றுத் திறனாளிகள் எனப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா? அவர்களின் திற மைகள் பயன்படுத்தப்பட வேண்டாமா? அவர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையைப் பெறு வதற்கே பல அலுவலகங் களின் படிகளை ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. மத்திய அரசு உணவுப் பாதுகாப்பு மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்கிறது. நிராதரவாக நடுத்தெருவில் இருப்பவன் பட்டினியோடு தான் இருப்பான். இவனுக்கு மாதம் 35 கிலோ அரிசி என் பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஆனால் பட்டினி யோடு இருப்பவனை ஏழை யாகவும், நிராதரவாக நடுத் தெருவில் நிற்பவனை பரம ஏழையாகவும் உணவுப்பாது காப்பு மசோதா சித்தரிக் கிறது. மத்திய அரசு தனது தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்ப பொது வினியோக முறையை சிதைக்க முயலுகிறது. விவ சாயத்திலும், பொது வினி யோகத்திலும் தனியார் முத லாளிகளை திணிக்க முயலு கிறது. மேலும் தண்ணீருக்கான கொள்கை ஒன்றை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. குடிநீர், சுகாதாரம் தவிர மற்ற வினி யோகத்திற்கு ஆகும் செலவு அனைத்தையும் தண்ணீரின் அடக்க விலைக்கே உட் படுத்த வேண்டுமாம். இது போதாதென்று குடிக்கும் நீர் கழிவாக வெளியேறுகிறதே அதை சுத்தப்படுத்துவதற்கு ஆகும் செலவையும் இதில் சேர்க்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு ஆலோ சனை கூறுபவர் சொல்கிறார். இப்படி உழைப்பாளி கள் மீது சுமைகளையும், அடக்கு முறைகளையும் இந்த அரசு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மறுபுறம் பெரு முதலாளிக ளுக்கும், பன்னாட்டு நிறு வனங்களுக்கும் சலுகைகளை யும், ஊக்கத்தொகையை யும், மானியங்களையும் வாரி வாரி வழங்குவதோடு, அந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகளையும் விட்டுக் கொடுப்பதில் தாரா ளம் காட்டுகிறது. எனவே, இக்கொடுமை களிலிருந்து மக்களை மீட் டெடுக்கவும், உழைக்கும் மக்களை போராட்டக் களத்தில் அணிஅணியாக திரட்டும் உறுதியையும் மாநாடு தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறது. இதிலிருந்து மக்களை திசை திருப்ப சில கவர்ச்சிகரமான திட்டங்களை ஆளும் வர்க் கங்கள் அவ்வப்பொழுது அறிமுகப்படுத்திக் கொண் டேயிருக்கும். இதை முறி யடித்து நமது போராட் டங்களை வெற்றிகரமாக்க சபதம் ஏற்போம்.

Leave A Reply

%d bloggers like this: