நாகப்பட்டினம், பிப்.26- மக்கள் பிரச்சனைகளை பேச எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் எழும்போதே அவர் களின் வாயை அடைக்கும் விதமாக அமைச்சர்கள் பதில் சொல்ல ஆரம்பித்து விடுகி றார்கள். இப்பொழுதெல் லாம் அம்மா அம்மா என துதிபாடும் பஜனை மடமா கவே சட்டமன்றம் ஆகி விட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ சாடினார். நாகை பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: தமிழகம் முழுவதும் ஆயிரத்து நானூற்றுக்கும் மேற்பட்ட கிளை மாநாடு களையும், நானூற்றி ஐம் பதுக்கும் மேற்பட்ட இடைக் கமிட்டி மாநாடுகளையும், முப்பத்து நான்கு மாவட்ட மாநாடுகளையும் முடித்து, நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வெற்றிகர மாக நிறைவடைந்திருக் கிறது. திராவிடக் கட்சி களில் உள்கட்சித் தேர்தல் என்றால் வெட்டுக்குத்து, ஏன் கொலைகளில் கூட முடிந்த வரலாறு உண்டு. தமிழ்நாட்டில் எங்கே இருக் கிறது என்று தேட வேண் டிய காங்கிரஸ் கட்சிக்குக் கூட நிர்வாகிகள் தேர்வு என்றால் தமிழகமே கலவர பூமியாக மாறிவிடும். ஏனென் றால் அந்தக் கட்சிகளில் பொறுப்புக்களை வகிப்பது சொந்த நலனுக்காகவும் சொத்துக்களை சேர்ப்பதற் காகவுமே. மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான் கட்சிப் பொறுப்புகளை மக்கள் சேவையை மேலும் முன் னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பாகப் பார்க்கிறது. தானே புயலால் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டி னம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளன. ஆனால் ஜெயல லிதாவோ யானைப் பசிக்கு சோளப்பொரியைப் போட் டதைப்போல சில அறி விப்புகளோடு நிறுத்தி விட் டார். ஒரு ஹெக்டேருக்கு வெறும் 7,500 ரூபாய் மட்டும் அறிவித்த போது, ஒரு சட்டமன்ற உறுப்பினர் எங்கள் ஊருக்கு தானே புயல் வரவில்லையே என வருத்தப்பட்டு முதல்வரின் புகழ் பாடினார். இன்னொரு எம்எல்ஏவோ அம்மா அம்மா நாங்களெல்லாம் சும்மா சும்மா எனப் பாட் டுப் பாடுகிறார். அப்படியா னால் சும்மாக்களையெல் லாம் சேர்த்து வைத்துத் தான் அம்மா ஆட்சி நடத்து கிறாரோ? ஜெயலலிதா தன்னுடன் இருந்த சசிகலா குடும்பத் தினரை கடந்த ஐந்தாண்டுக ளுக்கு முன்பு அளவுக்கதிக மான சொத்துக்களை குவித்து விட்டதாக பல்வேறு வழக்கு களில் கைது செய்து வருகி றார். அப்பொழுது உங்க ளுக்குத் தெரியாமலா இவ் வளவும் நடந்தது? இப்பொ ழுது பெங்களூர் நீதிமன்றத் தில் நடந்த தவறுகளுக்கெல் லாம் தான் மட்டுமே பொறுப்பு எனவும், ஜெயல லிதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லையெனவும் சசிகலா வாக்குமூலம் கொடுக்கிறார். அப்படியானால் நீ அடிக் கிற மாதிரி அடி நான் நடிக் கிற மாதிரி நடிக்கிறேன் என்கிற நாடகமா? அதிமுக ஆட்சிக்கு வந்து எட்டே மாதங்களில் எட்டு லாக்கப் மரணங்கள், பரமக் குடியில் ஆறு பேர் சுட்டுக் கொலை, திருக்கோவிலூ ரில் பழங்குடியினப் பெண் கள் மீது காவல்துறையினர் பாலியல் வன்முறை என அவலங்கள் தொடர்கின் றன. மொத்தத்தில் இது காவல்துறை ராஜ்ஜியத்தின் அராஜக ஆட்சியாகவே தொடர்கிறது. கடந்த திமுக ஆட்சியில் கரும்பு டன்னுக்கு ரூ.2500 கேட்டு விழுப்புரத்தில் போராட்டம் நடத்திய ஜெய லலிதா, தன்னுடைய ஆட்சி யில் தான் கேட்டதையாவது தரலாமே? கடந்த ஆட்சி யைப் போலவே வீட்டுமனைப் பட்டா இல்லாத லட்சக் கணக்கான குடும்பங்க ளுக்கு பட்டா வழங்க இந்த ஆட்சியும் எந்த அக்கறை யும் எடுக்கவில்லை. மொத்தத்தில் திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் அது மக்களை வஞ்சிக்கிற ஆட்சியாகத் தான் இருக்கும் என்பது நிரூபணமாகிவிட்டது. எனவே, புதிய பாதையை இடதுசாரிப் பாதையை தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.