புதுதில்லி, பிப். 26 – தில்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் கார் தாக்குதல், தொலைக்காட்சி களில் ஒளிபரப்பான விதம் குறித்து, அதிருப்தி அடைந்த தில்லி காவல்துறை, தீவிர வாத நிகழ்வுகளை, தொலைக் காட்சி அலைவரி சைகள் ஒளிபரப்புவதை, கட்டுப் படுத்த வேண்டும். உறுதிப் படுத்தப்படாத தகவல்களை நிகழ்வுகளையும், செய்திகளையும் விசாரிக்காமல், தொலைக் காட்சிகள் ஒளிபரப்புகின் றன என தேசிய ஒளிபரப்புத் துறை தர ஆணையத்திடம் (என்பி எஸ்ஏ) புகார் செய் துள்ளது. உறுதிப்படுத்தப் படாத தகவல்களை மின் னணு ஊடகங்கள் ஒளிபரப் பக்கூடாது என்றும், காவல் துறை வேண்டுகோள் விடுத் துள்ளது. இந்தத்துறையின் பொது மக்கள் தொடர்பு அதிகாரி, புகார் கடிதத்தை என்.பி.எஸ்.ஏ. தலைவரான நீதிபதி ஜே.எஸ்.வர்மா விடம் அளித்துள்ளார். பிப்ரவரி 13ம்தேதியன்று தலைநகரில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி கார் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் குறித்து, தொலைக்காட்சி அலைவரி சைகள் ஒளிபரப்பிய விதத் தில் அதிருப்தி அடைந்த காவல்துறை இவ்வாறு கடிதம் எழுதியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: