நாகப்பட்டினம், பிப். 26 – திராவிட இயக்கத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் திமுக தலைமை தீண்டாமை ஒழிப்புக்காக போராடாதது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். நாகை மாநாட்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜி.ராம கிருஷ்ணன், திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்து திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கட்டுரையில் தீண் டாமை, அண்டாமை, பாராமை ஆகிய கொடுமைகளுக்கு எதி ராக தந்தை பெரியார் போராடியதாக எழுதியிருக்கிறார்; அத் தகைய போராட்டத்தை நடத்திய பெரியார் மறைந்த பின்பும், இன் றும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் தீண்டாமைத் தீ கொளுந்துவிட்டு எரிகிறதே, இக்கொடுமைக்கு எதிராக திமுகவின் தலைவர் சுட்டுவிரலை நீட்டியதுண்டா எனக் கேள்வி எழுப்பினார். ஆனால், இன்றைக்கும் தமிழகம் முழுவதிலும் தீண் டாமைக் கொடுமைக்கு எதிராக தீரத்துடன் போராடிக் கொண் டிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று குறிப்பிட்ட ஜி.ராமகிருஷ்ணன், கீழத்தஞ்சையில் தீண்டாமையின் முது கெலும்பை ஒடித்தவர் எங்கள் மகத்தான தலைவர் பி.சீனிவாச ராவ் என்று பெருமிதத்துடன் கூறினார். மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறார்கள்; ஆனால் அமைச்சராக இருந்த திமுகவின் ராசா ரூ.1.75 லட்சம் கோடி ஊழலில் சிக்கி னார். நாடு முழுவதும் ஊழல் உட்பட பல்வேறு வழிகளில் கொள்ளையடிக்கப்படும் பணம் சுவிஸ் வங்கிகளில் புரள்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் ரூ.25 லட்சம் கோடி அளவிற்கு கருப் புப்பணம் பதுக்கப்பட் டிருப்பதை சிபிஐ இயக்குநர் உறுதிப் படுத்துகிறார். அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே; கொள் ளையடிப்பதற்காக அல்ல என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள். மக்களை வதைக்கும் கொள்கைகளை அமலாக்கு வதில் திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ வேறுபாடு இல்லை. இவர்கள் மத்திய ஆட்சி யாளர்களுடன் மாறி மாறி கூட்டு சேர்ந்துகொள்கிறார்கள். நவீன தாராளமயக் கொள்கைகளை அமலாக்கும் இத்தகைய ஆட்சி யாளர்களுக்கு எதிராக மார்ச் 27ம்தேதி நடைபெற உள்ள மாநிலம் தழுவிய மாபெரும் மறியலை மகத்தான முறையில் வெற்றிபெறச் செய்வீர்.

Leave A Reply

%d bloggers like this: