தூத்துக்குடி, பிப். 26- திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா ஞாயி றன்று காலை கொடியேற் றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதி காலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2மணிக்கு உதய மார்த்தாண்ட அபி ஷேகம், 3.30 மணிக்கு கொடி பட்டம் வெள்ளி பல்லக்கில் 9 சந்நிதிகளுக்கு சென்று கோவிலை வந்த டைதல் ஆகியவை நடந்தது. பின்னர் கொடி பட் டத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு 5.35 மணிக்கு கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது. இதை யடுத்து கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, தர்ப்பை புல், வண்ண மலர்கள், பட்டாடைகளால் அலங் கரிக்கப்பட்டது. அதன்பிறகு தீபாரா தனை நடந்தது. கொடி யேற்று நிகழ்ச்சியில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 12 நாட்கள் நடைபெறும் மாசித் திரு விழா, தேரோட்டம் உள் ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பின் மார்ச் 6ம்தேதி நிறை வடைகிறது.

Leave A Reply

%d bloggers like this: