திருச்சிராப்பள்ளி, பிப்.26- திருச்சி பெல் நிறுவனத் தின் செயல்பாடுகளை எடுத் துரைக்கும் வீடியோ இத ழின் முதல்பதிப்பை வெளி யிடும் விழா திருச்சி பெல் நிறுவனத்தில் நடந்தது. பெல் நிறுவனத்தின் செய லாண்மை இயக்குனர் ஏ.வி. கிருஷ்ணன் வீடியோ இத ழின் முதல் பதிப்பை வெளி யிட, அதை திட்டமிடல் மற்றும் மேம்பாடு பொது மேலாளர் எஸ். கோபிநாத் பெற்றுக் கொண் டார். விழாவில் பெல் நிறுவ னத்தின் செயலாண்மை இயக்குனர் ஏ.வி.கிருஷ்ணன் பேசியதாவது: இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்பட வுள்ள இந்த வீடியோ இத ழில் பெல் திருச்சி பிரிவில் நிகழும் முக்கிய திட்டங் களுக்கான அனுப்புகைகள் முக்கிய நபர்களின் வரு கைகள், செயலாண்மை இயக்குநரின் செய்தி, வாடிக்கையாளர்களின் கருத்துகள், எதிர்காலத் திட்டங்கள், சமூகப் பொறுப் புணர்வு திட்டங்கள் மற் றும் உடல்நலம் குறித்த செய்திகள் இடம்பெறும். ஊழியர்களுடனான தகவல் பரிமாற்றத்தில் நிறுவனத் தின் திட்டங்களின் ஒரு அங்கமாக இந்த இதழ் உள் ளது. ஊழியர்களுக்கு அன் றாட அலுவல்கள் குறித்த மற்றும் தேவையான தக வல்களை கொண்டு சேர்க்க தொடர்பு அமைப்புகள் தேவை. இதனை பெல் நிறு வன பதிப்பு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் மற்றும் ஒலி, ஒளி வாயிலாக செய்து வருகின்றன. இந்த வீடியோ இதழ் பெரும் ஊழியர் எண்ணிக்கை கொண்ட திருச்சி பிரிவின் தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவிடும் என்றார். விழாவில் மூத்த ஊழி யர்கள் மற்றும் தொழிற் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மக்கள் தொடர்பு மற்றும் நிர்வாக பொது மேலாளர் எஸ்.எஸ். பிள்ளை வரவேற்றார். மக்கள் தொடர்பு மற் றும் நிர்வாக துணை பொது மேலாளர் கே.முரளி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.