நாகப்பட்டினம்,பிப்.26- திராவிட இயக்கங்களி னால் மக்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. எனவே, உழைப் பாளி மக்கள் தங்களது உரி மைகளைப் பெற, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பின்னால் அணி திரண்டு வரவேண்டுமென டி.கே. ரங்கராஜன் எம்.பி. அழைப்பு விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பொதுக்கூட்டத் தில் பங்கேற்று அவர் பேசிய தாவது: கடந்த 40 ஆண்டுகளாக திராவிட இயக்கங்களினால் மக்கள் வாழ்வில் என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கிறது? 20 ஆண்டுகளாக அனைத் தும் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு வரு கிறது. மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை திமுகவும், அதிமுகவும் தீர்க்கும். இதன் மூலம் ஏழை -எளிய மக்கள் வாழ்வில் சிறிய முன்னேற் றம் ஏற்படும் என்ற அடிப் படையிலேயே மார்க்சிஸ்ட் கட்சி இவர்களுடன் தொகுதி உடன்பாடு காண்கிறது. தொடர்ந்து மக்கள் பிரச் சனைகளுக்காக போராடி யும் வருகிறது. மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை கடுமை யாக உயர்த்தி வருகிறது. இந்த விலை உயர்வை அவர் களது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள திமுக கண்டிக்கத் தயங்குகிறது. உரவிலை உயர்வைப் பற்றி மத்திய உரத்துறை அமைச் சர் கவலைப்படவில்லை. புதிதாக பொறுப்பேற் றுள்ள அதிமுக தனது சுயரூ பத்தை காட்டத் துவங்கியுள் ளது. கல்வி வியாபாரமாகி விட்டது. மருத்துவம் எட் டாக்கனியாகிவிட்டது. அதிமுக அரசு மக்க ளுக்கு அரிசியை இலவச மாக வழங்குகிறது. மக்கள் அரிசி வாங்குவதற்குக் கூட வழியில்லாமல் உள்ளனர் என்பதையே இது காட்டு கிறது. பேருந்துக் கட்டணம், பால் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. கட் டண உயர்வுகளை திரும்பப் பெறுங்கள் என தமிழக முதல்வரை வலியுறுத்தி னால், மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார். அரிசி கூட வாங்க வழியில்லாமல் உள்ள மக் களுக்காக இலவச அரிசியை வழங்கும் அரசு, மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டதாகக்கூறுவது வேடிக் கையானது. பெண் உரிமை, தீண்டா மைப் பிரச்சனை, இட ஒதுக் கீடு போன்ற பிரச்சனை களுக்காக திராவிட இயக் கங்கள் போராடியது என்ற வரலாறு பெரியாரோடு முடிந்துவிட்டது. இதைப் பற்றி திமுக, அதிமுக கவ லைப்படுவதில்லை. உத்தப்புரத்தில் தீண்டா மைச் சுவர் இருந்தது இவர் களுக்கு தெரியாதா? மார்க் சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் வருகிறார் என்றவுடன் அந் தச் சுவரின் ஒரு பகுதி இர வோடு இரவாக உடைக்கப் பட்டு பாதை ஏற்படுத்தப் பட்டது. தீண்டாமை பிரச் சனைகளில் தலையிடுவதில் திராவிட இயக்கங்கள் எந்த ளவிற்கு அக்கறை செலுத்து கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் அரசுக்குத் தெரியாதா? இப்பிரச்சனை யில் அரசு உடனடியாக தலையிட வேண்டும். சட்டமன்றம் ஜனநாய கப்பூர்வமாக நடைபெற வேண்டும். எதிர்க்கட்சி யைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு எழுந்தால், உடனே அமைச் சர்கள் எழுந்து பேசத்து வங்கிவிடுகிறார்கள். உறுப் பினர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை முழுமையாக கேட்டறிய வேண்டும்.தேமுதிக தலை வர் விஜயகாந்தை சட்ட மன்றத்திலிருந்து இடைநீக் கம் செய்திருப்பது தேவை யற்றது. மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க திராவிட இயக்கங்கள் தவறி விட்டன. இந்தச் சூழலில் மக்களின் பிரச்சனைகளுக் காக தொடர்ந்து போராட, மக்கள் பணியாற்ற அனை வரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு ஆதர வளிக்கவேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: