தாராபுரம், பிப். 26 – தாராபுரத்தில் ஆண் குழந்தை வேண்டி பூட்டிய வீட்டுக்குள் 3 நாளாக தவம் இருந்த பெண்ணை போலீசார் அதிரடியாக மீட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் லட் சுமண நாராயணசாமி(40). லாரி டிரைவர். மனைவி வள்ளிநாயகி(38). ஹேம லதா (13), சுவாதி (12) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஆண் வாரிசு இல்லாதது வள்ளிநாயகிக்கு கவலை அளித்தது. உறவினர்களும் ஆண் குழந்தை இல்லா ததை அவரிடம் குறை யாக கூறி வந்துள்ளனர். 2வது குழந்தை பிற ந்ததும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டதால், இனிமேல் குழந்தைக்கு வாய்ப்பில்லை என்ற கவலை, வள்ளிநாயகியி டம் இருந்துள்ளது. இந் நிலையில் தில்லாபுரி அம் மன் குழந்தை வரம் தரு வதாக தன்னிடம் கூறிய தாக சொல்லி, தன்னை வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிடும்படி குடும்பத் தாரிடம் கூறியுள்ளார். அவர்களும் வள்ளிநாயகி விருப்பப்படி கடந்த 22ம் தேதி அதிகாலை 2 மணி க்கு, அவருக்கு மஞ்சள் ஆடை உடுத்தி, முகத்தில் மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய அளவில் குங்குமம் வைத்து ஒரு சொம்பில் தண்ணீர் மட்டும் கொடுத்து, வீட்டினுள் அனுப்பி வெளி யில் பூட்டி விட்டனர். 3ம் நாளான நேற்று பக்கத்து வீட்டை சேர்ந் தவர்கள் தாராபுரம் போலீ சாருக்கு தகவல் கொடுத் தனர். போலீசார் வள்ளிநா யகியின் வீட்டுக்கு விரை ந்து சென்று கதவை திறக் கச் சொல்லி தவம் செய்த தாக கூறிய அவரை மீட் டுள்ளனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியில் வந்த வள்ளிநாயகி சொன்ன போது ‘என் தவத்தை கலைத்தவர்களின் நிலை என்ன ஆகப்போகிறது, பாருங்கள்’ என்று ‘சாபம்’ விட்டார். இதனால் பொது மக்களிடம் பீதி ஏற்பட் டுள்ளது. வள்ளிநாயகியை மீட்ட எஸ்.ஐ மணிமாறன் கூறுகை யில், ‘வள்ளிநாயகியை அவர் களது குடும்பத்தார், அவ ரது பேச்சை நம்பி வீட் டுக்குள் வைத்து பூட்டி விட்டனர். 3 நாள் ஆனதும் அவர்களுக்கு பயம் வந்து விட்டது. அவரை காப் பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் வள்ளிநாய கியை வெளியில் கொண்டு வர நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது’ என்றார். வள்ளிநாயகி கூறுகை யில், “தாராபுரம் அமரா வதி ஆற்றங்கரையில் உள்ள தில்லாபுரி அம்மன் கோயி லுக்கு சென்று எனது குறையை சொல்லி வழி பட்டபோது. அம்மன் எனக்கு ஆண் குழந்தை யைத் தருவதாக வாக்களித் தார். அதன் மூலம் தன்னை யார் என்று உலகுக்கு காட்டப்போகிறேன் என் றும் கூறினார். முன்பு இக் கோயிலில் சாமி சாட்டும் போது, ஒரு குடிசைக்குள் 15 கைப் பிடி புல்லையும், 15 படி தண்ணீரும் வைத்து, தொப்புள்கொடி விழாத ஆட்டுக்குட்டியை உள்ளே வைத்து பூட்டி விடுவார் களாம். 15 நாட்களுக்கு பிறகு திறந்து பார்க்கும் போது ஆட்டுக்குட்டி உயி ருடன் இருக்குமாம். தற் போது அது நடைமுறை யில் இல்லை. அம்மன் அந்த முறைப்படிதான் என்னை தவம் இருக்கச் சொன்னார். 15 நாள் முடிந் ததும், கோயிலில் குண்டம் வளர்த்து பற்றி எரிகின்ற தீயில் அமர வேண்டும் என்பது அம்மனின் கட் டளை. இதை ஏற்று கொண்டு, பூட்டிய வீட் டுக்குள் தனியே தவம் இருந்து வந்தேன். எனது தவத்தை கலைத்து விட்ட னர். என்ன நடக்குமோ என்கிற பயம் இருந்து வரு கிறது. இவ்வாறு வள்ளிநா யகி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: