நாகப்பட்டினம், பிப்.26- தமிழகத்தில் அனைத்து இடது சாரி, ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டக்கூடிய விதத்தில் புதிய அரசியல் பாதையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பயணிக் கும் என்று கட்சியின் அகில இந்தி யப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார். குறிப்பாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அதிமுக வும், திமுகவும் ஒவ்வொரு முறை யும் சந்தர்ப்பவாதமாக, காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு மக்கள் விரோத தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இங்குள்ள இதர பகுதி ஜனநாயக சக்திகளையும் ஒன்றி ணைத்து புதிய அணியை உரு வாக்க மார்க்சிஸ்ட் கட்சி முயற்சி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாட்டின் நிறைவாக பிப்ரவரி 25ம் தேதி சனிக்கிழமை யன்று மகத்தான செம்படை அணி வகுப்பும், உழைப்பாளி மக்களின் பேரணியும் நாகப்பட்டினத்தை செம்மயமாக்கியது. இதன் நிறை வாக தோழர் பி.சீனிவாசராவ் நினைவுத்திடலில் சுமார் 2லட்சம் பேர் பங்கேற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய பிரகாஷ்காரத் மேற்கண்டவாறு கூறினார். இக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது: இங்கே கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி படிப்படியாக வளர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. நாகை மாநாடு தமிழக மார்க்சிஸ்ட் கட்சி வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தக்க மைல் கல்லாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமல்படுத்தும் நவீன தாரா ளமயப் பொருளாதாரக் கொள்கை களையே பல மாநில அரசுகளும் பின்பற்றுகின்றன. தமிழகத்திலும் இக்கொள்கைகளை அமல்படுத் துவதால் தான் விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாயப் பிரச்ச னைகள் ஏற்பட்டுள்ளன. மின்வெட்டுக்கு காரணம் தற்போது தமிழக மக்கள் மின் வெட்டுப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். மின் உற் பத்தியில் தனியார்மயத்தை அனு மதித்ததே இந்த நிலைக்குக் கார ணம். வெளிநாட்டு பெரு முதலாளி களை மின் உற்பத்தி செய்ய அழைத்தனர். ஆனால் அவர்கள் வரவில்லை. எனவே மின்துறை தனி யார்மயம் தோல்வி அடைந்தது. அத்தோடு அரசும் புதிய மின் உற் பத்தித் திட்டங்களை செயல்படுத்த வில்லை. எனவேதான் மின்வெட்டு ஏற்படுகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் இது போல் பெருமளவி லான மின்வெட்டு ஏற்படுகிறது. ஊழல் கட்சிகள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தமிழகத் தில் திமுகவைச் சேர்ந்த முக்கிய மானவர்களே சிக்கினர். காங்கிரஸ், திமுக, பாஜக என எல்லா முதலா ளித்துவக் கட்சிகளும் ஊழலில் ஊறித் திளைப்பவர்களாகவே உள்ளனர். 34 ஆண்டு கால மேற்கு வங்க இடதுமுன்னணி ஆட்சி யானாலும், கேரளாவில் இருந்த இடதுஜனநாயக முன்னணி ஆட்சி யானாலும், 18 ஆண்டுகளாகத் தொடரும் திரிபுரா இடதுமுன் னணி ஆட்சியானாலும் யாருமே இந்த ஆட்சிகளுக்கு எதிராக, ஆட்சியில் இருந்த இடதுசாரித் தலைவர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டைச் சொல்லி சுட்டு விரலைக்கூட நீட்ட முடியாது. கடந்த 20 ஆண்டுகளாக மத்தி யில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் பின் பற்றும் தாராளமயக் கொள்கை களுக்கு எதிராகத் தொடர்ச்சி யாகப் போராடி வருவதுடன், மாற் றுக் கொள்கைகளை முன்வைத்து வருவது மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் மட்டுமே. குறிப்பாக விவசாயத்தை எடுத்துக் கொண்டால் அரசாங்கப் புள்ளிவிபரப்படியே 2 லட்சத்து 56 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே உர மானியத்தை வெட் டியதுடன், எஞ்சிய விவசாய மானி யத்தையும் வெட்டப் போவதாக மன்மோகன் சிங் கூறுகிறார். இது விவசாயிகளின் துன்பத்தை மேலும் அதிகரிக்கும். இதே ஆட்சியாளர்கள் தான் அமெரிக்க, மேலைநாட்டு முதலா ளிகளுக்குச் சாதகமாக இந்தியா வின் சில்லரை வர்த்தகத்தைத் திறந்துவிடப் போவதாகக் கூறுகின் றனர். வால்மார்ட் போன்ற நிறு வனங்களின் சூப்பர் மார்க்கெட்டு களை அனுமதித்து காய்கறி வியா பாரத்திலும் ஈடுபடப் போகின் றனர். இந்த கடைகளை மூடச் சொல்லி மிகப்பெரும் போராட்ட இயக்கங்களை நடத்துவது குறித்து ஏப்ரலில் நடைபெறவுள்ள கட்சி யின் அகில இந்திய மாநாட்டில் தீர் மானிக்கப்படும். மத்திய ஆட்சியாளர்களின் அமெரிக்க ஆதரவு தாராளமயக் கொள்கைகளுக்கு உறுதியான எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் தான் மேற்கு வங்கத்திலும், பிற பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி யினருக்கு எதிராகத் திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வருகின்றனர். எனினும் அதற்கு எதிராக செங் கொடியின் கீழ் பல லட்சக்கணக் கானோர் அணிதிரண்டு வருகின் றனர். இத்தகையத் தாக்குதல்கள் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியை ஒடுக்கிவிட முடியாது. அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி தொய்வின்றிப் பாடுபடும். எனவே உழைப்பாளி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி நடத் தும் இயக்கங்களில் பங்கேற்பது டன், கட்சியை பலப்படுத்தவும் முன்வர வேண்டும். இவ்வாறு பிரகாஷ் காரத் கூறி னார். இவரது ஆங்கில உரையை மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது மொழிபெயர்த்தார்.

Leave A Reply

%d bloggers like this: