தஞ்சாவூர், பிப். 26- தஞ்சாவூர் சங்கீத மகா லில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு கிராமியக் கலை கள் வளர்ச்சி மையம் இணைந்து தமிழ் இலக்கிய விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் தலைமை தாங்கினார். தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலா ளர் பி.எஸ்.சச்சு வாழ்த் துரையாற்றும்போது, முதல் கட்டமாக 10 மாவட்டங் களில் இவ்விழாக்கள் சிறப் பாக நடைபெறுகிறது என்று கூறினார். அரசு முதன்மைச் செய லாளர் – டான்சி மற்றும் தமிழ்நாடு கிராமியக் கலை கள் வளர்ச்சி மையத்தின் தலைவர் கா.அலாவுதீன் பேசும்போது, கலை வளர்த்த தஞ்சாவூரில் இவ் விழா சிறப்பாக நடைபெறு வது பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார். மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் துவக்கிவைத்துப் பேசினார். இயல் வளர்த்திட சரஸ் வதி மஹால் நூலகம் போற் றப்படுவது போல், தமிழ்ப் பல்கலைக் கழகத்தையும் தாங்கி நிற்பதும் தஞ்சையே. இசை அரசியின் கருவி யான வீணை தயாரிக்கப் படுவதும் தஞ்சை மண்ணில் தான். நாடகக் கலையின் மூலம் ஆற்றங்கரையோரம் நாகரிகம் வளர்த்ததும் தஞ்சை மண்ணில்தான். எனவே, இயல், இசை, நாட கம் மூலம் கலை வளர்த்த பெருமைக்குரிய தஞ்சை யில் தமிழ் இலக்கிய கலை விழா நடைபெறுவது பொருத்தமானதாகும் என்று குறிப்பிட்டார். முன்னதாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் தேவா அனைவரை யும் வரவேற்றுப் பேசினார். திரைப்பட நடிகர் குண் டுகல்யாணம் குழுவினரின் கலை நிகழ்ச்சி, தேன்மொழி இராசேந்திரன் குழுவின ரின் கரகாட்டம், இரா.ரங்க ராஜன் குழுவின் தப்பாட் டம், கல்யாணசுந்தரம் குழு வின் விகடம் நிகழ்ச்சி, திரு வையாறு அரசு இசைக் கல்லூரி மாணவர்களின் நாதசுவர இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலு வலர் சீ.சுரேஷ்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) அஜய் யாதவ், வட் டாட்சியர் முருகதாஸ், அருங்காட்சிய காப்பாளர் சிவக்குமார், வட்டாட்சியர் பாதாளம் மற்றும் அலுவ லர்கள், பொதுமக்கள் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். கிராமிய கலைகள் வளர்ச்சி மைய இயக்குநர் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: