ஈரோடு, பிப். 26- ஈரோட்டில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை நேரத்தை அதிகப்படுத்த அதிகாரிகள் வாய்மொழி யாக அளித்துள்ள உத்த ரவை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என சிஐடியு வலியுறுத்தி உள் ளது. இது குறித்து சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங் கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன் தெரிவித்துள்ளதாவது. தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 257 டாஸ்மாக் கடைகளிலும் விற்பனையை உயர்த்திடும் வகையில் காலை 9.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கடை களை மூடுமாறு ஈரோடு மாவட்ட மேலாளர் அலு வலகத்திலிருந்து தொலை பேசி மூலம் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இது தமிழக அர சின் மதுவிலக்கு கொள்கை களுக்கு எதிரானதாகும். இதற்கு காரணம், டாஸ் மாக் விற்பனை நிலையங் கள் மூடிய பின் பார்களில் வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படு கிறது எனக் கூறப்பட்டுள் ளது. இதன் மூலம் விற் பனை இலக்கை எட்ட முடியாததால் கடையின் விற்பனை நேரத்தை அதி கப்படுத்தியுள்ளோம் என அதிகாரிகள் தெரிவிப்பது மிகவும் வருத்தத்திற்குரிய தாகும். ஏனெனில் பார் நடத்துபவர்கள் அரசு விதி முறை மற்றும் அதிகாரி களுக்கு கட்டுப்படுவதே யில்லை என்பதே நடை முறையிலுள்ள எதார்த்த மாகும். இது மட்டுமின்றி கடை யில் வாடிக்கையாளர்கள் விரும்பும், அதிகம் விற் பனையாகும் மது வகை களை டாஸ்மாக் குடோன் களில் இருந்து தேவை யான அளவிற்கு கடை களுக்கு விநியோகிப்ப தில்லை. இவ்வாறு தேவைப் படும் மது வகைகளை பெற வேண்டுமெனில் கடையின் ஊழியர்கள் கையூட்டு அளிக்க வேண் டிய அவலமான சூழலும் நிலவி வருகிறது. இவ்வாறு விற்பனை இலக்கை எட்டமுடியா மல் போவதற்கு நடை முறைக் காரணங்கள் பல இருக்க, விற்பனை நேரத்தை மட்டும் அதிகப்படுத்து வது என்பது சரியான தீர் வாக இருக்காது. எனவே விற்பனை நேரத்தை அதி கப்படுத்தி வாய்மொழி யாக அதிகாரிகள் இட் டுள்ள உத்தரவை உடனடி யாக ரத்து செய்திட வேண் டும் என ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் கேட் டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: