சேலம், பிப். 26- சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி களுக்கும் மார்ச் 31-க்குள் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அனைவருக்கும் கல்வித் திட்ட அதிகாரிகள் (ளுளுஹ) தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி களுக்கும் அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவை இந்த மார்ச் 31-ம் தேதிக்குள் செய்து முடிக்கப்படும். இதற்கான ஆய் வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அப்பணிகளை செய் வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இப் பணிகளை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு விட எஸ்.எஸ்.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 218 பொதுக்கழிப்பறை, 203 பெண்கள் கழிப்பறை, 132 இடங்களில் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வரு கிறது. அதேபோல், மாதவிடாய் காலத்தில் பெண் கள் பயன்படுத்தும் நாப்கினை எரிப்பதற்கு இன்சின ரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. கழிப்பிடம் கட்ட ரூ.90 ஆயிரமும், தண்ணீர் வசதிக்காக ரூ.10 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, தொகையும் வழங்கப் பட்டு விட்டது. மேலும், பணிகளை முழுமையாக நடத்திமுடிக்க அனைவரையும் தீவிரப்படுத்தி யுள்ளோம். எனவே, மார்ச்சிற்குள் இப்பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: