தஞ்சாவூர், பிப். 26- தஞ்சை நகராட்சி எல் லைக்குட்பட்ட சுகாதாரத் தொழிலாளர் குடியிருப் பில் சுகாதாரச் சீர்கேட் டால் 20க்கும் மேற்பட் டோர் வயிற் றுப்போக்கால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவ மனை, மருத்துவக் கல் லூரி மருத்துவமனையி லும் அனுமதிக்கப்பட் டுள்ளனர். தஞ்சை வடக்கு வாசல் ஏ.வி.பதி நகரில் 297 வீடு களில் துப்புரவுப் பணியா ளர்கள் குடியிருந்து வரு கின்றனர். இந்தக் குடி யிருப்புகள் அனைத்தும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்குச் சொந்த மானது. ஊரையே தூய் மைப்படுத்தும் இவர்க ளின் குடியிருப்புகள் சுகா தாரம் அற்ற நிலையில் உள்ளன. கழிவு நீர்க் குழாய்கள் உடைந்து அந்தக் குடியிருப்புப் பகுதி களில் ஆறாக ஓடுகிறது. மேலும் அகற்றப்படாமல் அப்பகுதிகளில் துர்நாற் றம் வீசுகிறது. குடிநீருக்கென்று நக ராட்சியால் 20 வீட்டிற்கு ஒரு குழாய் வீதம் அமைக் கப்பட்டுள்ளது. இதில் வரும் தண்ணீரில் செப்டிக் டேங்க் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்துள்ளது. இத் தண்ணீரை குடித்த 20க்கும் மேற்பட்டோ ருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட் டுள்ளது. 297 குடியிருப்புகளுக்கு வாடகையாக தலா ரூ.200ம், பராமரிப்புச் செலவிற்காக ரூ.50ம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் வசூலிக்கப் படுகிறது. இப்பகுதி யில் சுகாதாரப்பணி செய் வதற்கு வாரியத்தால் ஒரு பணியாளர் நியமிக்கப்பட் டுள்ளார். அவர் கடந்த ஒரு வருடமாக இப்பணி க்கு வருவதில்லை என்று குடியிருப்புப் பகுதி மக் களால் சொல்லப்படுகிறது. ஊரெல்லாம் தூய்மைப் படுத்தும் நகராட்சி நிர் வாகம் எங்கள் பகுதியை கண்டுகொள்வதில்லை. இது சம்பந்தமாக சுகா தாரத்துறைக்கு தெரிவித் தும் கண்டுகொள்ளாத தால் இந்தப் பாதிப்பு ஏற் பட்டுள்ளது என்று அப் பகுதி மக்கள் தெரிவித்த னர். இது தொடர்பாக, மாவட்ட சுகாதார துணை இயக்குநரிடம் தொலை பேசியில் கேட்டதற்கு, எனக்குத் தெரியாது என் றும் இதற்கு முழு பொறு ப்பு தஞ்சை நகர் நல அலு வலர் தான் என்றும் தெரி வித்தார். தஞ்சை நகர் நல அலுவ லரிடம் தொலைபேசியில் கேட்டதற்கு, இப்போது தான் மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக தெரிவித் தார். நான் வெளியூரில் இருக்கின்றேன். உடனடி யாக ஒரு குழுவை அனுப்பு வதாகவும் தெரிவித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்கு சென்ற பிறகுதான் சுகாதார அலுவலர்கள் இப்பகுதி யில் காலடி வைத்துள்ள னர். எது எப்படி இருந்தா லும் சுகாதாரப் பணி யாளர்களை பாது காக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். (ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: