டமாஸ்கஸ், பிப். 26 – புதிய அரசமைப்புச் சட் டம் குறித்து மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு சிரியாவில் நடைபெற்று வருகிறது. சீர்திருத்தங்களை அமல்படுத்தி நாட்டில் நில வும் கொந்தளிப்புகளுக்கு தீர்வுகாணுமாறு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக் கப்பட்டு வருவதால் வாக் கெடுப்பு நடத்துமாறு ஜனா திபதி அசாத் பிப்ரவரி 15 அன்று உத்தரவிட்டார். சிரியாவில் மக்கள் தொ கையில் மூன்றில் இரண்டு பங்கு (1.46 கோடி) வாக்கா ளர்களாக உள்ளனர். நாடு முழுவதும் பத்தாயிரம் வாக்கு மையங்கள் நிறுவப் பட்டுள்ளன. அரசு அளித் துள்ள சீர்திருத்த உறுதி மொழிகள் அடங்கிய வாக் குச்சீட்டில் மக்கள் வாக்க ளிப்பர். தேர்தல் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் ஜனநாயக முதல் அதிகாரங் கள் பிரிக்கப்படும் என்று நகல் அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. தற்போது உள்ள சட்டப்படி அரபு சோச லிஸ்ட் பாத் கட்சி நாட்டின் தலைவராக இருக்கும் என்று அது கூறுகிறது. ஜனாதிபதி பதவிக்கு ஏழு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். ஒரு வர் இருமுறை ஜனாதிபதி யாகப் போட்டியிடலாம். சிரிய உள்துறை அமைச்ச ரும், அவருடைய இரு உதவி அமைச்சர்களும் வாக்கெடுப்பை மேற்பார்வையிடுவார்கள். கணிசமான சீர்திருத்தங்கள் இடம் பெற்றபோதும், எதிர்க் கட்சிகள் வாக்கெடுப்பை நிராகரித்துள்ளன. வாக் கெடுப்புக்கு முந்தைய நாள் சிரியாவில் கடுமையான மோதல் நடைபெற்றது. ஹோம்ஸ், இட்லிப் மாகா ணங்களில் கடுமையான துப்பாக்கிச் சூடும் நடை பெற்று வருகிறது. சனிக் கிழமையன்று நடைபெற்ற மோதல்களில் சுமார் 94 பேர் மாண்டனர்

Leave A Reply

%d bloggers like this: