நாகப்பட்டினம், பிப்.26- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு நாகப்பட் டினத்தில் பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 25 வரை நடை பெற்றது. பிப்ரவரி 25 அன்று சுமார் 2 லட்சம் பேர் பங் கேற்ற பேரணி நடைபெற் றது. பேரணியின் நிறைவாக பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நாகை மாவட் டச்செயலாளர் ஏ.வி.முரு கையன் தலைமையில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில், கட்சியின் பொதுச்செய லாளர் பிரகாஷ்காரத் சிறப் புரையாற்றினார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.வரத ராசன், மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, மாநிலச் செயற் குழு உறுப்பினர் அ.சவுந்தர ராசன் ஆகியோர் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து வரவேற்புரை யாற்றினார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி நன்றி கூறினார். பிரகாஷ்காரத்தின் ஆங்கில உரையை மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது தமிழாக்கம் செய்தார். பாராட்டு மாநில மாநாடு மற்றும் நிறைவு நாள் பொதுக் கூட் டத்திற்கு சிறப்பான முறை யில் ஒலி-ஒளி அமைப்பு செய்திருந்த மயிலாடுதுறை ஜெமினி ஒலி பெருக்கி நிறு வன உரிமையாளரும் கட்சி உறுப்பினருமான நாராய ணன், மாநில மாநாட்டு அரங்கம், தலைவர்களின் பெயர் தாங்கிய தோரண வாயில்கள், பிரம்மாண்ட மான பொதுக்கூட்ட மேடை ஆகியவற்றில் நேர்த்தியாக ஓவியம் வரைந்திருந்த ஓவி யக் கலைஞர் திருப்பரங் குன்றம் வெண்புறா ஆகி யோரை தலைவர்கள் பாராட்டி கவுரவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: