திருநெல்வேலி, பிப். 26 – நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு களை உடனடியாக துவக்கக் கோரி மாணவ – மாணவி யர் 20-வது நாட்களுக்கு மேலாக கண்களில் கறுப் புத் துணி கட்டிக் கொண்டு உள்ளிருப்பு போராட் டத்தை நடத்தி வருகின்றனர். பாளை அரசு சித்தா மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் பி.எஸ்.எம். எஸ் மற்றும் எம்.டி படிப் பில் சேருவதற்கான கவுன் சிலிங் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடை பெற்றது. இதில், ஏராளமான மாண வ-மாணவியர் சேர்ந்தனர். இதற் கிடையே கல்லூரி யில் போதுமான உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறிய இந் திய மருத்துவ கவுன்சில், கல்லூரியில் வகுப்புகளை துவக்க அனுமதி மறுத்தது. இதன் மூலம் தங்களின் ஓராண்டு கால வாழ்க்கை பறி போவதால், முதலா மாண்டு மாணவ, மாண வியர் உள்ளிருப்பு போராட் டத்தைத் தொடங்கினர். மாணவர்களின் போராட் டத்தைபற்றி கேள்விப் பட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், இந் திய மாணவர் சங்கம், சி.ஐ. டி.யு தொழிற்சங்கம், எஸ். டி.பி.ஐ உள்ளிட்ட அமைப் புகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ-மாணவி யரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். எனினும், ஆட்சியா ளர்கள் இதுவரையும் கண்டு கொள்ளாததால், முதலாமாண்டு மாணவ-மாணவியர் கண்களில் கறுப்புத் துணியைக் கட் டிக் கொண்டு, 20 நாட்க ளுக்கு மேலாக உள்ளிருப் புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வரு கின்றனர். சித்தா கல்லூரி பிரச் சனையை பொறுத்தவரை அனுமதியை மத்திய அரசு தான் தர வேண்டுமென் பதால், மத்திய அரசு, மா ணவ-மாணவியரின் எதிர் கால நலனை கருத்தில் கொ ண்டு முதலாமாண்டு வகுப்புகளை துவக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: