கோத்தகிரி, பிப். 26- கோத்தகிரி- மேட்டுப் பாளையம் செல்லும் சாலையில் தவிட்டு மேடு பகுதியில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் சாலை யின் நடுவே வெள்ளை கோடுகள் அமைக்கும் பணி யில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளை வர்ணம் தயா ரிக்க பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்களை சூடேற்ற எரிவாயு பயன் படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் அதிக வெப்பத் தால் எரிவாயு வெடித்தது. இதனால் லாரியில் இருந்த வேதியியல் பொருட்களில் தீ பிடித்தது. இதனால் லாரி முழுவதும் தீ பரவியது. இது குறித்து கோத்தகிரி தீயணைப்பு துறையின ருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. இதையடுத்து சம் பவ இடத்திற்கு வந்த தீய ணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் லாரி முழுவதும் தீ பரவியதால் முற்றிலுமாக எரிந்து சேத மாகின. மேலும் வெள்ளை கோடுகள் அமைக்க பயன் படுத்தப்படும் கருவிகளும் முற்றிலுமாக சோதமாகின.

Leave A Reply

%d bloggers like this: