கர்நாடக அரசியலில் உட்கட்சி பூசல் இருப்பதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது – பாஜக தலைவர் நிதின் கட்காரி. ச.சா – ஆமா… பெரிய மோதல் இருக்குறப்ப அத இப்படி குறைச்சு மதிப்பிடக்கூடாது…! * * * சமூக வலைத்தளங்களுக்குக் கட்டுப்பாடு அவசியம் – மத்திய அமைச்சர் கபில் சிபல். ச.சா – அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரா இதப் பயன்படுத்த ஆரம்பிச்ச பிறகுதான இப்புடி யோசிக்க ஆரம் பிச்சீங்க…? * * * இதற்கு முந்தைய காலத்தில் நடைபெற்ற ஊழலைக்காட்டிலும் இந்த அரசின் ஊழல் மிகப்பெரியது – பாஜக தலைவர் அருண் ஜெட்லி. ச.சா – முந்தைய காலம்னா உங்க காலத்துல நடந்த ஊழலச் சொல்றீங்களா..?? * * * கிராமப்புறத்திற்கு நகர்ப்புற வசதிகளை அளிக்கும் அப்துல் கலாமின் கனவுத்திட்டம் தோல்வி – மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ச.சா – நீங்க நடைமுறைப்படுத்துன திட்டத்துல வெற்றியடைஞ்சது ஏதாவது இருக்கா…??

Leave a Reply

You must be logged in to post a comment.