கொடைக்கானல், பிப். 26- மே மாதம் நடக்க உள்ள 51 வது மலர் கண்காட்சிக்காக கொடைக்கானலில் 3 லட்சத்துக்கும் அதிகமான பலரக மலர்ச் செடிகள் பரா மரிக்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானலில் கோடை சீசனையொட்டி மே மாதத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஒரு வார காலம் கோடை விழா நடத்தப்படும். முதல் இரண்டு நாட்கள் பிரை யண்ட் பூங் காவில் மலர் கண் காட்சி நடக்கும். இந்தியா மட்டுமின்றி வெளி நாடு களில் இருந்தும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வருவர். இந்த ஆண்டு, 51 வது மலர் கண்காட்சியை அலங் கரிக்க பிரையண்ட் பூங்கா வில் நூற்றுக்கும் அதிகமான வகைகளை சேர்ந்த ஒரு லட்சம் பருவ மலர்ச் செடிகள், ஆண்டுதோறும் பூத்துக் குலுங்கும் வகையை சேர்ந்த 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய் யப்பட்டுள்ளன. இதுதவிர 10 வகை ரோஜா செடிகளும் ஆயிரக் கணக்கில் நடவு செய்யப்பட்டுள் ளன. கடந்த சில மாதங்களாக பனி மூட்டம் இருந்ததால், செடிகள் கருகாமல் இருக்க தற்காலிக நிழற்கூடாரங்கள் அமைத்து பாது காத்து வந்தனர். தற்போது பனி நீங்கி யுள்ளதால் நிழற்கூடாரங் கள் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து செடிகளுக்கு தேவையான உரம் வைத்து, மருந்து தெளித்து வருகின்ற னர். இதுதவிர மலர் கண் காட்சி அரங்கம் அமைக்க வெளிநாடு களில் இருந்து புற்கள் வாங்கி வந்து வளர்த்து வருகின்றனர். நவீன பிரின்ட் கலர் எனும் கருவி மூலம் புற் களுக்கு தண்ணீர் தெளிக் கப்பட்டு வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: