ஈரோடு,பிப்.26- மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களை வறு மைக்கோடு பட்டியலில் சேர்த்திட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் ஈரோடு மாவட்ட அமைப் பாளர் வி. நடராஜன் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தை தரைத் தளத்தில் செயல்பட ஏற்பாடு செய்திட வேண்டும்.மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்களில் மனநல மருத்துவர்கள் பங்கேற்கச் செய்திட வேண்டும். மருத்துவ தகுதிச் சான்று குறைத்து கொடுப்பதை தடுத்து நிறுத்தி மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் அரசின் சலுகைகள் கிடைத்திடச் செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி களில் சைக்கிள் ஸ்டேண்ட் அமைக்க மாற்றுத்திற னாளிகளுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும். பொதுத்துறை மற்றும் தனியார் மருத்துவமனை களில் லிப்ட் இயக்கும் பணியில் மாற்றுத்திறனாளி களை நியமித்திட வேண்டும். மாற்றுத்திறனாளி களுக்கு மாதாமாதம் தனியாக குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட வேண்டும். அவர்களின் குடும் பங்களை வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்க வேண்டும். வறுமை ஒழிப்புத் திட்டத்தில் வழங் கப்படும் ஆடு, மாடுகள் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.