காங்கிரஸ், பாஜக-வுக்கு மாற்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக்கட்சிகளே என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் அவர்களும், காங்கிரஸ் மற்றும் பாஜகவோடு மாறிமாறி கூட்டு வைத்து, அந்த கட்சிகள் பின்பற்றும் அதே தாராளமயமாக்கல் கொள்கை களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் அதிமுக, திமுக வுக்கு மாற்று தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளே என்று தமிழ கத் தலைவர்களும் கூறியபோது மைதானத் தில் கூடி இருந்த லட் சக்கணக்கானோரின் கரவொலி நாகையின் கடல் ஒலியை மிஞ்சியது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20 வது தமிழ்நாடு மாநில மாநாடு நாகப்பட்டினத் தில் நான்கு நாட்கள் எழுச்சியுடன் நடந்தது. மாநாட்டின் முத்தாய்ப் பாக சனிக்கிழமையன்று நடைபெற்ற பேரணி நாகை நகரின் வர லாற்றில் மட்டுமல்ல, கீழத்தஞ்சை வரலாற் றில் ஒரு மைல்கல் லாக, திருப்புமுனை யாக, மக்கள் திருவிழா வாக அமைந்தது என் றால் அது மிகையல்ல. பேரணி புத்தூர் அண்ணாசிலை அருகிலிருந்து புறப் பட்டு, வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத் தில் பொதுக்கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேரணி எங்கு எப்போது துவங்கியது, எங்கே எப்போது முடிந் தது என்று கண்டறிய முடியாதபடி நாகை நகரமே செங் கொடிகளால், உழைக்கும் மக்களால் பொங்கி வழிந்தது. பேரணி ஒரு இடத்தை கடக்க மூன்று மணி நேரமானது என வெட்டு விழுந்துள்ளது. நாவலன் கையில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் பதித்த மோதிரத்தை அணிந்திருக்கிறார். அவரது கைகளில் வெட்டு விழுந்தபோது விரல்கள் துண்டாகி உள்ளன. மோதிரத்தின் மீதும் வெட்டு விழுந்துள்ளது. ஆனாலும் மோதிரத்தில் உள்ள அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் பாதிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட தியாகிகள் நிறைந்த கட்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தக் கட்சிக்கு தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று அந்தப் பத்திரிகையாளர் என்னிடம் கூறினார் என்று தோழர் பிரகாஷ் காரத் குறிப்பிட்டார். அப்போது அரங்கமே ஒரு கணம் உறைந்து, அடுத்தநிமிடம் கைத்தட்டலால் நிறைந்தது. களப்பால் குப்பு துவங்கி, தோழர் நாவலன் வரை எண்ணற்ற தியாகிகளை பொதுவுடைமை இயக்கத்திற்கு தந்த மண் கிழக்கு தஞ்சை. அத்தகைய கிழக்கு தஞ்சையில் நடைபெற்ற மாநாடு புதிய வெளிச்சத்தை, நம்பிக்கையை தருவதாக அமைந்துள்ளது. மாநாடும், பேரணியும் தந்த உத்வேகத்தோடு களமிறங்குவோம். மக்கள் நலன் காக்க போராட்டப்பாதையில் அணிவகுப்போம்.

Leave A Reply

%d bloggers like this: