சில பத்திரிகைகள் கூறியுள்ளன. அதேநேரத்தில் பொதுக்கூட்டம் முடிவடைவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை பொதுக்கூட்ட திடலை நோக்கி ஜனக்கடல் வந்துகொண்டே யிருந்தது என்பதுதான் உண்மை. மாலை 5 மணி அளவில் துவங்கிய பேரணி இரவு 9 மணி வரை நடந்துகொண்டேயிருந்தது. செந்தொண்டர்களின் கம்பீரமான அணி வகுப்பு நாகை நகர மக்களுக்கு ராணுவ ஒத்திகையை நினைவுபடுத்தியது. பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட போதும் எந்தவித வன் செயலோ, அசம்பாவிதமோ, தகாத வார்த்தைகளோ இல்லாதது நாகை நகர மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து பாராட்டாத நகர மக்களே இல்லை. பேரணி காரணமாக போக்குவரத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டபோதும், பேரணியில் கலந்து கொண்ட உழைக்கும் மக்கள் வர்க்கம் காட்டிய கண்ணியமும், கட்டுப்பாடும் நகர மக் களை பெரிதும் கவர்ந்தது என் பதை அவர்களது சிலிர்ப்பான வார்த்தைகளிலிருந்து உணர முடிந்தது. பேரணி குறித்து தினமணி ஏடு (திருச்சி பதிப்பு) எழுதும்போது, பேரணியில் வந்த வர்கள் தலைவர்கள் வாழ்க என்று கோஷம் போடவில்லை, யாரையும் ஒழிக என்றும் கோஷம் போடவில்லை. மாறாக மத்திய-மாநில அரசுகளின் மக்கள்விரோதக் கொள் கைகளை எதிர்த்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்தக்கோரியும், அரசுப் பணி களில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி யும், தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரி யும், தமிழக மீனவர்களை பாது காக்கக் கோரியும், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்தும், தீண்டாமைக் கொடுமைக்கு முடிவுகட்ட கோரியும், ஊழலை எதிர்த்தும், விவ சாயம், தொழிலை பாதுகாக்கக் கோரியும் கோரிக்கை அட்டைகளை ஏந்தி வந்தனர். இது ஏனைய அரசியல் கட்சிகளிடமிருந்து வேறுபட்ட ஒன்று என எழுதி யுள்ளது. இந்து பத்திரிகையும் இதே போன்று எழுதியுள்ளது. தினமணி ஏடு மேலும் கூறுகையில், ஊர்வலத்தில் வந்தவர்கள் சில்லரை வர்த்த கத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் அபா யத்தை விளக்கும் வகையில் சித்தரித்த காட்சியை எடுத்துக் காட்டியுள்ளது. ஒருவரை பாடையில் படுக்கவைத்து முன்னே சென்றவர்கள் ஒப்பாரி வைப்பவர்கள் போல நடித் துக் காட்டினர். இது மக்களை பெரிதும் கவர்ந்தது என்று அந்த ஏடு கூறியுள்ளது. பேரணியில் வந்த பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் தங்கள் மாவட் டத்தின் நாட்டுப்புறக் கலையை, வீரவிளையாட்டுகளை நிகழ்த்திக் காட்டியது மக்களை பெரிதும் கவர்ந்தது. வண்ண வண்ண குடைகளையும், பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர்களின் படங்களையும் தொண்டர்கள் ஏந்திவந்தனர். கட்சியின் மாநில மாநாட்டை நாகையில் நடத்துவது என்று மாநிலக்குழு முடிவு செய்த உடனேயே அந்த மாவட்டக் குழுவும் கட்சி அணிகளும் உற்சாகமாக களத்தில் இறங்கிவிட்டனர். வரவேற்புக்குழுவின் தலைவராக வி.மாரிமுத்துவும், செயலாளராக ஏ.வி.முருகையனும், பொருளாளராக நாகை மாலி யும் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயற்குழு சார்பில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ அவர்களுக்கு வழிகாட்டி களத்தில் நின்றார். கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு மற்றும் இடைக்கமிட்டி செய லாளர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் இந்த மகத்தான பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். வரவேற்புக்குழுவின் நூற்றுக்கணக்கான தோழர்கள் ஆற்றிய பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு சிறு பிசிறு கூட இல்லாமல் மாநாட்டை நடத்த உதவிசெய்த பாங்கு மெச்சத்தக்கது. நாகை தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கட்சியின் முதுபெரும் தோழர் ஆர்.உமாநாத்தும், 90 வயதை தொட்ட பிறகும் சற்றும் உற்சாகம் குன்றாமல், விடுதலைப் போராட்ட காலத்தில் களமிறங்கிய அதே புத்துணர்ச்சியோடு திகழும் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யாவும், கடந்த 3 மாநாடுகளில் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றிய தோழர் என்.வரத ராஜனும், நாகை தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய கோ.வீரய்யனும் மாநாடு நடைபெற்ற நான்கு நாட்களும் முழுமையாகக் கலந்து கொண்டு விவாதங்களை கூர்மையாகக் கவனித்தனர், வழி காட்டினர். முழுமையாக அமர்ந்திருக்க வேண்டுமா, சற்று ஓய்வெடுக்கலாமே என்று சங்கரய்யாவிடம் கேட்டபோது, கட்சியின் இளைய தலைமுறை பொறுப்புணர்வோடு விவாதிப்பதை, கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதை பார்ப்பதைவிட வேறு எது மகிழ்ச்சி தரமுடியும் என்று கேட்டார். மூத்த தலைவர்கள் கோ.வீரய்யன், ஏ.அப்துல்வகாப் ஆகியோர் மாநாட் டில் கௌர விக்கப்பட்டனர். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் மேலாண்மை பொன்னுச்சாமி, சு.வெங்கடேசன் ஆகியோரையும் மாநாடு பாராட்டி மகிழ்ந்தது. மாநாட் டின் ஏராளமான நூல்கள் ஒலிப்பேழைகள் வெளியிடப்பட்டது கட்சியின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அகில இந்திய பின்னணியில் கட்சி செயல்பட வேண்டிய விதத்தை பிரதிநிதிகள் மாநாட்டில் விளக்கினார். மாநாட்டில் அவர் நிறைவுரையும் ஆற்றினார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, கே.வரதராசன், பிருந்தா காரத், பி.வி.ராகவலு ஆகிய தலைவர்கள் மாநாட்டில் முழுமையாக கலந்துகொண்டனர். ஒவ் வொரு பிரதிநிதியின் விவாதமும் உடனுக்குடன் மொழிபெயர்த்து அவர் களுக்கு தரப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் தா.பாண்டியன் மாநாட்டில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இடதுசாரிக்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத் தினார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்கள் வந்திருந்து மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்தனர். கட்சியின் மூத்த தலைவர்கள், தோழர்கள் இயக்கப் பணிக்காக தங்களை முழு மையாக அர்ப்பணித்த முன்னோடிகள் மாநாட்டில் கௌரவிக்கப் பட்டனர். மாநாட்டிற்கு வந்திருந்தோர் உங்கள் பணியை நாங்கள் தொய் வின்றி முன்னெடுத்துச் செல்வோம் என்று உறுதியளிப்பதாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. கள்ளச்சாராய ரவுடிகளால் வெட்டி வீழ்த்தப்பட்ட தியாகி நாவலனின் துணைவியார், அவரது தந்தை, தாய் ஆகியோர் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டபோது, அந்த அரங்கமே உணர்ச்சி பிழம்பானது. நாவலனின் துணைவி வசந்தா கண்ணீருக்கிடையே முஷ்டி உயர்த்தி செவ்வணக்கம் தெரிவித்தார். நாவலனின் தந்தை ஜெகநாதனுக்கு வயது 80. நாவலன் கொல்லப்பட்டபோது, நான்தான் என் மகனை கட்சியில் சேர்த்துவிட்டேன். இன்றைக்கு அவன் கட்சிக்காக தியாகியாகிவிட்டான். என்ன நடந்தாலும் எங்கள் குடும்பம் கட்சியுடன் தான் இருக்கும் என்றார். அதே உணர்வை மாநாட்டிலும் வெளிப் படுத்தினார். பள்ளிப்பாளையம் வேலுச்சாமியின் மகன் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டார். மழலை மாறா அந்தச் சிறுவன் மாநாட்டு அரங்கிற்கு வந்தபோது, வேலுச் சாமியின் தியாகம் வீண் போகாது என தோழர்கள் தன்னெழுச்சியாக முழங்கினர். நவீன தாராளமயமாக்கல் கொள்கையை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கு ஏற்ப இம்மாதம் 28ம்தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத் திற்கு மாநாடு முழு ஆதரவு தெரிவித்தது. வெற்றி பெறச் செய்ய முழுவீச்சில் களத்தில் இறங்குவது என்றும் தீர்மானித்துள்ளது. மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து மார்ச் 27 அன்று தமிழகம் தழுவிய மறியல் போர் நடத்துவதென மாநாடு முடிவு செய்துள் ளது. கட்சியின் போர்வாளான தீக்கதிர் நாளேட்டின் வளர்ச் சிக்கு உதவ மார்ச் 13,14 தேதிகளில் மாநிலம் தழுவிய நிதி வசூல் இயக்கத் திற்கும் மாநாடு திட்டமிட்டுள்ளது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் தமிழக மக்களின் நலன் சார்ந்தவை. நாளைய போராட்டங்களுக்கு வியூகம் வகுக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. மாநாட்டிற்கு வந்த பிரதிநிதிகளில் பலரும் பேரணிக்கு வந்த பெரும் பாலானோரும் வெண்மணி கிராமத்திற்குச் சென்றுவந்தனர். கம்யூனிஸ்ட் களுக்கு என்றென்றும் எழுச்சி தரும் இடமாக வெண்மணி விளங்குகிறது என்பதையே இது உணர்த்துகிறது. கட்சி மாநாட்டின் பிரதிநிதிகளிடையே தோழர் பிரகாஷ் காரத் பேசும்போது, உணர்ச்சி மிகு செய்தி ஒன்றை கூறினார். ஒரு பத்திரிகையாளர் என்னை தில்லியில் சந்தித்தார். அரசியல் கட்சிகள் குறித்து கட்டுரை எழுதுவதற்காக அவர் வந்திருந்தார். அப்போது அவர் ஒரு புகைப்படத்தை என்னிடம் காட்டி னார். தோழர் நாவலன், கள்ளச் சாராய ரவுடிகளால் வெட்டி வீழ்த்தப்பட்டு கிடந்த படம் அது. அந்தப் படத்தை பெரிதாக்கி என்னிடம் காட்டினார். அதில் தோழர் நாவலனின் கை விரல்கள் மீது வெட்டு விழுந் துள்ளது. நாவலன் கையில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் பதித்த மோதிரத்தை அணிந்திருக்கிறார். அவரது கைகளில் வெட்டு விழுந்தபோது விரல்கள் துண்டாகி உள்ளன. மோதிரத்தின் மீதும் வெட்டு விழுந்துள்ளது. ஆனாலும் மோதிரத்தில் உள்ள அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் பாதிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட தியாகிகள் நிறைந்த கட்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தக் கட்சிக்கு தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று அந்தப் பத்திரிகையாளர் என்னிடம் கூறினார் என்று தோழர் பிரகாஷ் காரத் குறிப்பிட்டார். அப்போது அரங்கமே ஒரு கணம் உறைந்து, அடுத்த நிமிடம் கைத்தட்டலால் நிறைந்தது. களப்பால் குப்பு துவங்கி, தோழர் நாவலன் வரை எண்ணற்ற தியாகிகளை பொது வுடைமை இயக்கத்திற்கு தந்த மண் கிழக்கு தஞ்சை. அத்தகைய கிழக்கு தஞ்சையில் நடைபெற்ற மாநாடு புதிய வெளிச்சத்தை, நம்பிக்கையை தருவதாக அமைந்துள்ளது. மாநாடும், பேரணியும் தந்த உத்வேகத்தோடு களமிறங்குவோம். மக்கள் நலன் காக்க போராட்டப்பாதையில் அணிவகுப்போம்.

Leave A Reply

%d bloggers like this: