கொல்கத்தா, பிப். 26 – மேற்குவங்க மாநிலத் தில் நடைபெறும் கொலை கள், பாலியல் பலாத்காரங் கள் மீது எந்தவித நட வடிக்கையும், எடுக்காமல் பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கும், முதல்வர் மம்தா பானர்ஜியின் பதில் கள், கலைஞர்கள், நிபுணர் கள், சமூக ஆர்வலர்கள் மற் றும் அனைத்துத் தரப்பின ரையும் எரிச்சலடையச் செய்துள்ளதுடன், தங்கள் கோபத்தையும் வெளிப் படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் பர்த்வான் பகுதியில் மார்க் சிஸ்ட் கட்சியின் 2 மூத்தத் தலைவர்கள் ஆளும் திரி ணாமுல் காங்கிரசின் ஆதர வாளர்களால் கொல்லப் பட்டுள்ளனர். இந்தக் கொலைகள் மற் றும் கடன் நெருக்கடியில் விவசாயிகள் தற்கொலை கள், பாலியல் பலாத்கார கொடூரங்கள் அனைத்துக் கும், மம்தா பானர்ஜியின் மறுத்து பேசும் பதில்கள் அனைவரையும் எரிச்ச லடையச் செய்துள்ளது. பிப்ரவரி 28ம்தேதியன்று நாடு முழுவதும் உழைக்கும் வர்க்கத்தினர் நடத்தும் வேலைநிறுத்தப் போராட் டத்தை ஆதரித்து நடந்த பேரணியின்போது, சிபிஎம் தோழர்கள் பிரதீப் தா மற்றும் கமல்கயேம் கொடூர மாக கொல்லப்பட்டனர். மேற்குவங்க மாநிலத் தில், திரிணாமுல் காங்கிரஸ் பொறுப்பேற்ற பின்னர் நடந்துவரும் அட்டூழியங் கள் குறித்து எதிர்க்கட்சி யினர் கடும் எதிர்ப்பு தெரி விக்கும்போது, அதனை மறுத்து பதிலளித்து வரு வது மம்தாவின் வாடிக்கை யாகிவிட்டது. மேற்குவங்க மாநிலத்தை தவறான முறை யில் ஆட்சி செய்யும் மம்தா வை கண்டித்து, பல்வேறு தரப்பு நிபுணர்கள் கை யெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டனர். இதில் பேராசிரியர்கள் இர்பான் ஹபீப், பிரபாத் பட்நாயக், சி.பி. சந்திரசேகர் மற்றும் டீஸ்டா செதல்வாட், பேரா சிரியர் ஜெய்திகோஷ் கை யெழுத்திட்டு உள்ளனர். முன்னாள் எம்எல்ஏ உள்பட 2 சிபிஎம் தலை வர்கள் கொல்லப்பட்டது குறித்து மம்தாவிடம், செய் தியாளர்கள் கேட்டபோது, கொலையாளிகள் கசாப்பு கடைக்காரர்கள் அல்ல. உள் மோதல் விளைவு என பொறுப்பற்ற முறையில் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.