திருவாரூர், பிப். 26- திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள பாரதி தாசன் உறுப்புக்கல்லூரி யில் 165 மாணவ-மாணவி களுக்கு 6 லட்சத்து 23 ஆயி ரம் ரூபாய் கல்வி உதவித் தொகையினை தமிழக உண வுத்துறை அமைச்சர் இரா. காமராஜ் வழங்கினார். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழா வுக்கு மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் தலைமை வகித்தார். இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித்தலைவர் அ. ஜெயலட்சுமி, நன்னிலம் பேரூராட்சித்தலைவர் ராணிசுவாதி, ஒன்றியக் குழுத்தலைவர் சம்பத், ஒன் றியக்குழுத்துணைத்தலை வர் ராமகுணசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப் பினர் டி.ராஜேந்திரன், கோட் டாட்சியர் ந.ஸ்ரீராமன் ஆகியோர் கலந்து கொண் டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் பேரா.குபேந்திரன் வரவேற்றார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் நன்றி கூறினார். திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டியில் உள்ள பாரதிதாசன் உறுப் புக்கல்லூரியில் மாணவ – மாணவிகளுக்கு உதவித் தொகையினை உணவுத் துறை அமைச்சர் இரா.காம ராஜ் வழங்கினார். இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவ லர் ந.ஜீவகனி தலைமை யேற்றார். திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப் பினர் கே.உலகநாதன், நகர் மன்ற தலைவர் த.உமா மகேஸ்வரி, ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.வேதநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: