திருச்சிராப்பள்ளி, பிப்.26- திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் உழவர் பாது காப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்குதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீமுரளி தரன் வெளி யிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: திருச்சி மாவட்டத்தில் விவசாய தொழிலில் ஈடுபட் டுள்ள விவசாயிகள், விவ சாய தொழிலாளர்கள் மற் றும் அவர்களது குடும்பத் தினர் பயன்பெறும் வகை யில் முதலமைச்சரின் உழ வர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர்களால் உறுப்பினர் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுவரு கிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற மூலஉறுப் பினர்களுக்கு திருமண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், விபத்து மர ணம் மற்றும் காயம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவு உள்ளிட்ட நிதி உதவிதிட்டங்களும் மற்றும் உறுப்பினர் சார்ந்தவர் களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, ஈமச்சடங்கு செலவு உள்ளிட்ட நிதிஉதவி திட்டங்களும் செயல்படுத் தப்பட்டு வருகின்றன. பதி வுபெற்ற உறுப்பினருக்கான மகப்பேறு உதவித்தொகை யானது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரும் விண்ணப்பங்களை பெறு வதற்கான கிராம அளவி லான சிறப்பு முகாம் இன் றும் (27ம்தேதி) நாளை யும்(28ம்தேதி) இரண்டு தினங்களில் நடைபெறு கிறது. மேற்கண்ட தினங் களில் அந்தந்த கிராம நிர் வாக அலுவலர்கள் அவர் களுக்குரிய கிராமங்களில் இருந்து மனுக்களை பெறு வார்கள். இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகைகோரும் விவசாயத் தொழிலில் ஈடு பட்டுள்ள விவசாயிகள், விவ சாயத்தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும் பத்தினர், வெள்ளைத் தாளில் விண்ணப்ப மனு வினை எழுதி இன்றும், நாளையும் நடைபெறும் சிறப்பு முகாமில் அந்தந்த கிராம நிர்வாக அலுவல ரிடம் அளிக்கலாம். இத்திட் டத்தின் கீழ் உதவித்தொகை கோருவதற்கு குறிப்பிட்ட படிவம் ஏதும் நிர்ணயிக் கப்படவில்லை என்று ஆட் சியர் கூறியுள்ளார்.

Leave A Reply