சென்னை, பிப். 26- உலகமய பொருளாதாரத்தால் அதிகரித்து வரும் சவால்களை சந்திக்கும் வகையில் இந்தி யாவில் உள்ள பட்டய கணக்காளர்கள் (சிஏ) தயார்படுத்தப்படுவார்கள் என்று இந்திய பட்டய கணக்காளர் கல்வி நிறுவனத்தின் (ஐசிஏஐ) தென் மண்டல கவுன்சில் தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கே.விஸ்வநாத் தெரிவித்துள் ளார். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின்2012-13 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக கே.விஸ்வநாத் (பெங்களுர்), துணைத்தலைவராக டி.பிரசன்ன குமார் (விசாகப்பட் டினம்), செயலாளராக பி.வி. ராஜராஜேஸ்வரன், பி.ஆர்.சுரேஷ் (பெங்களுர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த கே.விஸ்வ நாத், உலகமய பொருளாதார சூழலில் இந்தியாவில் உள்ள பல துறைகளுக்கு ஏற்பட் டுள்ள சவால்களை போல் பட்டய கணக் காளர்களுக்கும் புதிய சவால்கள் ஏற்பட்டுள்ளன. அதை வெற்றிகரமாக எதிர்கொண்டு தொழிலில் முன்னேற ஐசிஏஐ தனது உறுப்பினர்களை நன்கு தயார்படுத்தும் என்றார். நேரடி வரி விதிப்பு முறை களை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது ஐசிஏஐ முயற்சியால் தான் என்றும் அவர் கூறினார். பட்டய கணக்காளர்கள் தங்களுக்கு உள்ள பொறுப்புகளை உணர்ந்து செயல் படவேண்டும் என்றும் அவர் கூறினார். மாணவர்களின் நலன் களை பொருத்தவரை அவர்களின் தேர்ச்சி விகி தத்தை அதிகரிக்க ஐசிஏஐ தொடர்ந்து முயற் சிக்கும் என் றும் தரமான பாடமுறைகள், தரமான பயிற்சி ஆகிய வற்றை வழங்க கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஐசிஏஐ தென் மண்டல வைர விழா வரும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: