புதுதில்லி, பிப். 26 – இரு திசைகளில் பயணிக்கும் ஹாக்கி இந்தியாவும், இந்திய ஹாக்கி கூட்டமைப்பும் சமரசம் செய்து கொள் ளக்கூடும். இவற்றை இணைக்கும் பணியில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்ஐஎச்) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முறையான அறிவிப்பு திங்களன்று வெளி யாகக்கூடும். இந்திய ஹாக்கி கூட்டமைப்பு (ஐஎச்எப்), எப்ஐஎச் தலைவர்களிடையே பல தொடர் கூட்டங்கள் நடந் துள்ளன. ஐஎச்எப் முன்னாள் தலைவர் கே.பி.எஸ்.கில் லும் எப்ஐஎச் தலைவர் லியாண்ட்ரோ நெக்ரேயும் தீர்வு காண முயல்கின்றனர். உலகத்தொடர் ஹாக்கி போட்டி களும் ஐஎச்எப்பின் அடையாளமும் விவாதங்களில் முக்கிய இடம்பெற்றன. உலகத்தொடர் ஹாக்கியை அங்கீகாரம் பெறாதது என்று எப்ஐஎச் கூறுவதை ஐஎச்எப் நிராகரிக்கிறது. ஏனெனில் இதற்கு எப்ஐஎச் அங்கீகாரம் தேவையில்லை என்று ஐஎச்எப் கூறுகிறது. விளையாட்டின் நலன்கருதி சில சலுகைகளை அளிக்க ஐஎச்எப் தயாராகி வருகிறது. ஒரு புதிய தலை வரின் கீழ் இணைவதால் இந்திய ஹாக்கி பலனடையும். புதிய பெயருடன் கூடிய ஒன்றுபட்ட அமைப்பின் கீழ் செயல்படுவதை இரு அமைப்புகளும் கொள்கை அள வில் ஏற்றுக் கொண்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: