புதுதில்லி, பிப். 26 – இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதிப்போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் தோற்று ஒலிம்பிக் செல்லும் வாய்ப்பை இழந்தது. தென் ஆப்பிரிக்காவிடம் 3-1 என்ற கோல்களில் இந்தியா தோற்றது. ஆட்டத்திறன், உடல் தகுதி, தாக்குப்பிடிக்கும் திறன், உற்சாகம், தீவிரம், தீரம் என அனைத்துத் துறைகளிலும் தென் ஆப்பிரிக்கா வலுவான திறன்மிக்க அணியாக விளங்கியது. அது வென்றதில் ஆச்சர்யம் இல்லை. தகுதிப்போட்டி இறுதி ஆட்டம் வரை இந்திய அணி சென்றதே ஒரு சாதனை என்று இந்திய அணித் தலைவி அசுந்தா லக்ரா கூறுவது முற்றிலும் சரியானது. ஆட்டம் தொடங்கிய நான்காம் நிமிடத்திலேயே இந்தியாவின் கோல் விழுந்தது. இந்திய அணி தொடக் கத்திலேயே சொதப்பிவிட்டது. இந்திய அணியின் தற் காப்பு பலவீனமாக இருந்தது. அதனிடம் உறுதியும் மன வலிமையும் இல்லை. தென் ஆப்பிரிக்காவின் முதல் கோலை ஷெல்லி ரஸ்ஸல் அடித்தார். முதல் பாதியின் 30ம் நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை பீட்டி கோட்ஸீ கோலாக மாற்றி னார். முதல்பாதியின் இறுதியில் தென் ஆப்பிரிக்கா 2-0 என முன்னிலைபெற்றது. இரண்டாம்பாதியில் இந்திய அணியால் தென் ஆப்பிரிக்காவின் கோல் அரைவட்டத்தில் நுழையவே முடியவில்லை. பந்தைப் பெறுவதிலும், நிறுத்துவதி லும், பகிர்வதிலும் பலவீனம் காணப்பட்டது. ஆட்டத்தில் 53ம் நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா தலைவி மார்ஷா மரேசியா அணியின் மூன்றாவது கோலை அடித்தார். 57ம் நிமிடத்தில் ஜஸ்பிரீத் கவுர் அணியின் ஆறுதல் கோலைப் போட்டார். தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து ஆடுவது சவாலா கும். எடுத்தவுடன் எளிதாக ஒரு கோலை இழந்துவிட் டோம். கிடைத்தவாய்ப்புகளைத் தவறவிட்டோம் என்று இந்தியப் பயிற்சியாளர் சி.ஆர்.குமார் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.