திருவாரூர், பிப். 26- திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் கொர டாச்சேரி ஒன்றியம் கிள ரியம் மார்க்சிஸ்ட் கட்சி யின் கிளை செயலாளர் ஆர்.சோமு திடீர் மார டைப்பால் ஞாயிற்றுக் கிழமை அன்று (பிப். 26) காலை 10 மணி அளவில் காலமானார். இவரது மனைவி எஸ்.காந்தி, களத் தூர் ஊராட்சியின் முன் னாள் உறுப்பினராக பணி யாற்றியவர். இவரது மகள் மஞ்சுளா, மருமகன் பிச் சையா ஆகிய இருவரும் கட்சி உறுப்பினர்கள். இவ ரது மகன் எஸ்.ரகு, வாலிபர் சங்க ஒன்றியக்குழு உறுப்பின ராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மீது பற்றுக் கொண்டு தீவிரமாகப் பணியாற்றும் குடும்பமாகும். சனிக்கிழமை அன்று (பிப். 25) நாகையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு செம்படைப்பேரணியில் கட்சிக் கொடியேந்தி மாநாட்டுத் திடல் வரை நடந்து வந்தார். மாநாட்டுப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி களிலும் முழுமையாகப் பங் கேற்றார். அவரது இந்த திடீர் மரணம் கட்சி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இவ ரது மறைவு செய்தியை அறிந்து மாவட்டச் செய லாளர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கே.ரெங்கசாமி, ஆர்.குமாரராஜா, மாவட் டக்குழு உறுப்பினர்கள் கே.சீனிவாசன், எம்.கலை மணி, ஒன் றியச் செயலாளர் எஸ்.சேகர், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் கே. எஸ்.செந்தில் உட்பட ஏரா ளமானோர் திரண்டு மல ரஞ்சலி செலுத்தினர். இவ ரது இறுதி நிகழ்ச்சி இன்று (பிப். 27) காலை 11 மணி யளவில் அவரது சொந்த ஊரான செம்பவளன்குடி கிராமத்தில் நடைபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: