விஜயவாடா, பிப். 26 – நாளை (பிப். 28) நடை பெறும், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட் டத்தில் பல்வேறு மாநிலங் களின் ஊழியர்கள், உழைக் கும் வர்க்கத்தினர் பங்கேற்க வேண்டும் என சிஐடியு விடுத்த வேண்டுகோளை ஏற்று, பிஎம்எஸ், ஐஎன்டி யுசி, சிஐடியு, டிஎன்டியுசி, ஏஐடியுசி, ஏஐயுடியுசி, எல் பிஎப் உள்பட 11 சங்கங்கள் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கை களை கண்டித்து, நாடு தழு விய வேலைநிறுத்த போராட் டத்திற்கு முன்வந்துள்ளன. தொழிற்சங்கத் தலைவர் கள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சிறை நிரப்பும் போராட்டத்தை மேற் கொண்டனர். தொழிற்சங் கத்தினர், அரசுப் பணிகளில் தனியார்மயம், அத்தியா வசியப் பொருட்கள் விலை வாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, ஒப்பந்த ஊழியர்கள் தேர்வை நிறுத்துதல், பணி நிரந்தரம் வழங்குதல், அனைத்து ஊழியர்களுக்கும் காப்பீடு, அனைத்து ஊழியர்களுக் கும் ஓய்வூதிய வசதியை நீட் டித்தல், நிபந்தனையின்றி தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்துதல் மற்றும் இதர கோரிக்கைகளை வலி யுறுத்தி, நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட் டம் நடத்துகின்றனர். சில தனியார் நிறுவனங்களில், அனைத்து ஊழியர்களும் தின சம்பளம் பெறுபவர் களாகவோ அல்லது அன் றாட தொழிலாளர்களாக வோ அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களாகவோ பணியாற்றுகின்றனர். 2011ம் ஆண்டு முடிவில் ரூ.2லட் சம் கோடியை தனியார் நிறு வனங்கள் செலுத்தவில்லை. ஆனால், பொதுப் பணத் தில் ரூ.2லட்சம் கோடியை மானியமாக அரசு, நிறு வனங்களுக்கு வழங்கி உள் ளது. சிஐடியு ஜாகியா பேட் டை செயலாளர் எம்.சீனி வாஸ் கூறுகையில், கடந்த 3 மாதத்தில் காய்கறிகள் விலை 26 சதவீதம் அதிகரித் துள்ளது. ஆந்திரப் போக்கு வரத்துக்கழக பேருந்து கட்டணத்தை அரசு அதி கரித்து, மக்கள் தலையில் ரூ.776 கோடி சுமையை வைத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: