முசிறி, பிப்.26- முசிறி, தொட்டியம் வட்டங்களில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை வெள்ளி விழா ஆண்டு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராமன் தலைமை வகித்தார். முசிறி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பிற்கு 2011 -2012 ஆம் ஆண்டிற்கு நன்கொடை அளித்த புரவலர்கள் 55 நபர்களுக்கும், ஓய்வு பெறும் ஆசிரியர்கள் 16 நபர்களுக்கும், 10 மற் றும் 12 ஆம் வகுப்புகளில் வட்ட அளவில் முதல் இரண்டு இடம் பெற்ற 7 மாணவர்களுக்கும், பள்ளி வாரியாக அரசுத் தேர்வில் முதல் இடம் பெற்ற 67 மாணவர்களுக்கும், இரண்டாம் இடம் பெற்ற 72 மாணவர்களுக்கும், அரசு தேர்வில் 100 விழுக்காடு பெற்றுத் தந்த ஆசிரியர்கள் 265 நபர்களுக்கும், விளை யாட்டு போட்டிகளில் சேம்பியன் பட்டம் பெற்ற 7 மாணவர்களுக்கும், உடற்கல்வி ஆசிரியர்கள் 7 நபர் களுக்கும், குடியரசுத் தலைவர் விருதுபெற்ற சாரணர் 50 நபர்களுக்கும், சாரண ஆசிரியர்கள் 9 நபர்களுக்கும், 100 சதவிகித விழுக்காடு மற்றும் முதலிடம் பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் 7 நபர்கள் உட்பட 562 நபர்களை பாராட்டி முசிறி கோட்டாட்சியர் ஜெயசீலா பரிசுகள் வழங்கி பேசினார். விழாவில் 2010-2011 ஆம் கல்வி ஆண்டில் வட்ட அளவில் அதிக தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி களான சேருகுடி, பைத்தம்பாறை, தொட்டியம், முசிறி பகுதிகளைச் சேர்ந்த மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு முசிறி நீதிமுத்துமணல் ஸ்ரீனிவாசன் சார்பில் நடராஜர் சிலை அன்பளிப்பாக வழங்கப்பட் டது. நிர்வாகக்குழு உறுப்பினர்களும், ஓய்வு தலை மையாசிரியருமான மருதநாயகம், ராஜசேகரன், பிச்சை, வீரேஸ்வரன், விஸ்வநாதன், பட்டதாரி ஆசிரி யர் காந்தி ஆகியோர் மாணவ, மாணவிகளை கல்வியில் சிறந்து விளங்க செய்வதற்கான பாடத்திட்ட முறைகள் குறித்து பேசினர். துணைத்தலைவர்கள் ஜனகராஜன், புகழேந்தி, முருகானந்தம், செயலர் மணிவண்ணன், இணைச் செயலாளர்கள் கண்ணகி, சங்கர், நாகேஸ்வரி, தலை மையாசிரியர்கள் தா.பேட்டை மணிவாசகம், அய் யம்பாளையம் துரைராஜ் மற்றும் ஆசிரியர்கள் சண்முகம், குணசேகரன், நாகேஷ், ஸ்ரீதரன், கோவிந்த சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பகுதி கல்வி ஆர்வலர்களும், மாணவ-மாணவியர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: