சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர் தல் மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக, தேமுதிக, திமுக, மதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. தேமுதிக வேட் பாளரை ஆதரிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியின் அராஜகம், அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகம் என்பது ஒரு நடைமுறையாகவே மாறிவிட்டது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் இதில் மாறுதல் இல்லை. திமுக ஆட்சியின்போது நடைபெற்ற திருமங் கலம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜகம் உச்சகட்டத்தை அடைந்தது. பண வெள்ளம் பாய்ந்தது. ‘திருமங்கலம் பார்முலா’ என்ற சொற்றொடர் உருவாகி உலகப் புகழ் பெற்றது. இதை அப்போதைய எதிர்க்கட்சியான அதிமுக எதிர்த்தது. ஆனால், இப்போது சங்கரன் கோவிலில் கிட்டத்தட்ட அதே அணுகுமுறையைத்தான் அதிமுகவும் பின்பற்றுகிறது. சங்கரன்கோவில் தொகுதியை 32 அமைச்சர்கள் முற்றுகையிட் டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும் கால்நடைகள் வழங் கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தின் பிற பகுதி களில் இந்தப் பணிகள் நடைபெறவில்லை. சங்கரன்கோவில் தொகுதிக்கு கடத்திவரப் பட்ட பணம் பிடிபட்டதாகவும் செய்திகள் கூறு கின்றன. பொதுவாக, பணம் பிடிபட்டதாக செய்தி வெளியானால் பிடிபடாத தொகையே அதிகமாக இருக்கும். இப்போதும் அப்படித்தான் நடக் கிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையின்மை என மக் கள் கடும் துயருக்கு ஆளாகியுள்ளனர். இதை யெல்லாம் தீர்க்கவேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அமைச்சர்கள், சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் பணி ஒன்றையே பிரதானமாகக் கருதி களம் இறக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் கூடுதல் பார்வையாளர் களை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இத னால் பயன் உண்டா என்ற கேள்வியே எழுகிறது. தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதை இந்த பார்வையாளர்களால் எந்த அளவுக்குத் தடுக்க முடியும் என்று தெரியவில்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகள் கறாராக அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, தடுக்க வேண் டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, உத்தேச மின் கட்டண உயர்வு, மின்வெட்டு, பரமக்குடி துப்பாக்கிச்சூடு என அதிமுக ஆட்சி யின் அவலங்களை ஆசை வார்த்தைகளால் மறைத்துவிடலாம் என அதிமுக கருதுகிறது. இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு சங்கரன் கோவில் தொகுதி மக்களுக்கு உண்டு. சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாகவும், சுயேச்சையாகவும் நடை பெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். வாக்குகளை விலை கொடுத்து வாங் கும் இழிசெயல் தடுக்கப்பட வேண்டும். இடைத் தேர்தல் என்பது ஆளும் கட்சியின் கவுரவப் பிரச் சனை அல்ல. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண் டிய விஷயமாகும். ஆளும் கட்சியின் அராஜ கத்தை தடுக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: