கோவை, பிப். 25- கோவையில் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு தனி தேர்வாளர்களின் விண் ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இது குறித்து அரசு தேர் வுகள் துறை கோவை மண் டல துணை இயக்குநர் தெரிவிக்கையில்: 8ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடை பெறுகிறது. இத்தேர்வில் தனித்தேர்வு எழுதும் மாணவர்களிடமிருந்து மார்ச் 2ம் தேதி வரை விண் ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தேர்வு எழுத விண்ணப் பிப்பவர்கள் 1.4.12 அன்று 12 வயது பூர்த்தி அடைந் திருக்க வேண்டும். அங்கீ கரிக்கப்பட்ட பள்ளிகளில் 8ம் வகுப்பிற்கும் கீழ் படித்து இடையில் நின்ற 12 வயது பூர்த்தி அடைந்தவர் கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித் தகுதி இல்லை. அரசு துறையால் நடத் தப்பட்ட 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் 1 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங் களில் தேர்ச்சி பெறாமல் இருப்பின், தேர்ச்சி பெறாத தகவலை தேர்வு துறைக்கு அனுப்பி வைத்த ஆவணம் அல்லது மதிப்பெண் பட் டியலின் நகலை விண்ணப் பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். படித்த பாடத்திட் டத்திலேயே தேர்வு எழுத லாம். தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச்-2ம் தேதிக்குள் விண்ணப்பம் பெற்று கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு பின் பெறப்பம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. முதன்முறையாக தேர்வி எழுதுபவர்களுக்கு 2011- 2012ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள் அடிப் படையில் வினாத்தாள் வழங்கப்படும். டிச-2010 மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு 2012- 2013 ஆம் ஆண்டில் நடத் தப்படும் 2 பருவ தேர்விக ளுக்கு மட்டும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தப்படும். ரூ. 125 தேர்வு கட்டணத்தை அரசுகருவூலங்களில் விண் ணப்பித்துடன் இணைப் பட்டுள்ள செல்லான் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். சமீபத்தில் எடுக்கப் பட்ட போட்டா மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான் றிதழ்களை ஜெம் கிளிப் மூலம் இணைக்க வேண் டும். ஸ்டேப்ரம் பின் அடிக்கக்கூடாது. விண் ணப்பத்தை மடிக்க கூடாது போன்ற பல விதி முறைகளை அவர் தெரி வித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.