இ ந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி ஆதிக்கம் 1960 ரோம் ஒலிம்பிக்கில் முடிவுக்கு வந்தது. பங்காளியான பாகிஸ்தானிடம் தங்கப் பதக்கத்தை இழந்தது. 1928ல் அறிமுகமானது முதல் 1956 வரை நடைபெற்ற ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது இந்தியா. இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 1-0 எனத் தோற்றது. இது பாகிஸ்தானின் முதல் ஒலிம் பிக் வெற்றியாகும். ஸ்பெயின் வெண்கலத்தைப் பெற்றது. ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் 30 ஆட்டங்களில் ஆடி 178-7 என்ற கோல் விகிதத்தில் மற்ற அணிகளை தோற்கடித்த இந்திய அணி, முதல் முறையாக தோல்வியை ருசிபார்த்தது. அணித் தலைவர் லெஸ்லி கிளாடியஸ் மூன்றாவது முறை யாக ஒலிம்பிக்கில் ஆடினார். இத்தோல்வியை தன்னால் மறக்கவே முடியாது என்று அவர் வருத்தப்பட்டார். இந்திய அணியின் செயல்பாட்டுத் திறன் குறைந்துகொண்டே வந்ததை போட்டிகளின் முடிவுகள் காட்டின. டென்மார்க்கை 10-0 என வென்ற இந்தியா, நெதர்லாந்தை 4-1 எனவும் நியூசிலாந்தை 3-0 எனவும் b வன்றது. கால், அரை இறுதிகளை 1-0 என வென்று இறுதியை 0-1 எனத் தோற்றது. அணி: லெஸ்லி கிளாடியஸ் (தலைவர்), ஜோசப் ஆன்டிக், ஜமன்லால் சர்மா, மொகிந்தர் லால், சங்கர் லட்சுமண், ஜான்பீட்டர், கோவிந்த் சாவந்த், ரக்பீர்சிங் போலா, உத்தம் சிங் குல்லர், சரண்ஜித் சிங், ஜஸ்வந்த் சிங், ஜோகிந்தர் சிங், பிரித்பால் சிங்.

Leave A Reply

%d bloggers like this: