சென்னை, பிப். 25- சென்னை வேளச்சேரி யில் கடந்த 23 ம் தேதி அதி காலை போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில்வங்கிகொள் ளையர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொள் ளையர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து கைப்பற் றப்பட்ட அடையாள அட் டைகள் மூலம், அவர்கள் பீகார் மற்றும் மேற்கு வங் கத்தை சேர்ந்தவர்கள் என தெரிந்தது. அடையாள அட் டையில் இருந்த முகவரியில் விசாரித்தபோது, அங்கு அதே பெயரில் வேறு நபர் கள் இருப்பதும் போலீசார் கைப்பற்றியது போலி அடை யாள அட்டைகள் என்ப தும் தெரியவந்தது. போலீ சார் தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை கும்பல் தலைவனாக செயல் பட்ட வினோத்குமார் என்ப வனின் செல்போனை போலீ சார் கைப்பற்றினர். அதில் அடிக்கடி பேசப்பட்ட எண் ணில் தொடர்பு கொண்ட னர். கொள்ளையனின் உறவி னர் ஒருவர் பேசினார். என் கவுன்ட்டர்நடத்தப்பட்டது பற்றி அவரிடம் கூறிய போலீசார், சென்னை வந்து உடலை பெற்றுக் கொள்ளு மாறு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வினோத்குமார் என்று அடை யாளம் காணப்பட்டவனின் அப்பா, சித்தப்பா, தங்கை 3 பேரும் விமானத்தில் சென்னை வந்தனர். போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந் தித்து விவரங்களை கேட்ட றிந்தனர். கமிஷனரிடம் அவர்கள் கூறியதாவது: எங்கள் மகன் பெயர் அஜய்குமார் ராய். அவனை நண்பர்கள் எல்லோரும் வினோத்குமார் என்றுதான் அழைப்பார்கள். அஜய் குமார், நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தான். பிசினஸ் விஷயமாக வெளி யூர் செல்வதாக கூறிவிட்டு அடிக்கடி நண்பர்களுடன் செல்வான். இப்போதும் அவன் பிசி னஸ் விஷயமாகத்தான் சென் றுள்ளான் என்று நினைத் துக் கொண்டிருந்தோம். போலீசார் சொன்ன பிறகு தான் விஷயம் தெரிந்தது. எங் கள் மகன் நல்லவன். எப் போதும் தவறான வழிக்கு செல்ல மாட்டான். அவனை யாரோ தவறான வழிக்கு மாற்றியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில், அஜய் குமாரின் இடது கை விரல் துண்டிக்கப்பட்டது. மணிக் கட்டுக்கு கீழே கை சேதம் அடைந்திருந்தது. வலது கை மட்டுமே முழுமையாக செயல்படும். என்கவுன்ட்ட ரில் அவன் சுட்டுக் கொல்லப் பட்டது அதிர்ச்சி அளிக் கிறது. இவ்வாறு கூறி கதறி அழுதனர். மற்ற 4 கொள்ளையர் கள் பற்றிய விவரங்கள் இன் னும் முழுமையாக தெரிய வில்லை. பறிமுதல் செய்யப் பட்ட அடையாள அட்டை கள் போலி என்பதால், கொள்ளையர்களின் உறவி னர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க தி.நகர் உதவிகமிஷனர் தமிழ்செல் வன் தலைமையிலான தனிப் படை போலீசார் பீகார் புறப்பட்டு சென்றுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: