வேலூர், பிப்.25- விஐடி பல்கலைக்கழகத் துடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராயல் மெல்பர்ன் தொழில் நுட்பக் கழக புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆர்எம்ஐடி உலகின் 100 முன்னணிப் பல்கலைக் கழகங்களுள் ஒன்று என் பது குறிப்பிடத்தக்கது. தொழில் நுட்பக் கல்வியில் உலகளவில் முன்னணியில் உள்ள இப்பல்கலைக்கழ கம் விஐடியுடன் மாணவர் மற்றும் பேராசிரியர் பரி மாற்றம், கூட்டு ஆராய்ச்சி மற்றும் புதிய பாடதிட்டங் கள் அறிமுகம் செய்வது குறித்து ஒப்பந்தம் ஏற் படுத்தியுள்ளது. விஐடி பல்கலைக்கழகத் தில், வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஒப் பந்தம் கையெழுத்திடப் பட்டது. விஐடி துணை வேந்தர் பேராசிரியர் வி. ராஜூவும் ஆர்எம்ஐடி துணை வேந்தர் பேராசிரி யர் மார்கரட் கார்ட்னர் அவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். விழா வில் விஐடி துணைத்தலை வர் சங்கர் விசுவநாதன், இணை துணை வேந்தர் பேராசிரியர் எஸ். நாராய ணன், ஆர்எம்ஐடி இணை துணை வேந்தர்கள் மற்றும் சர்வதேச உறவுகள் துறை அலுவலர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்ட னர். இந்த ஒப்பந்தம் விஐடி யின் 123வது சர்வதேச ஒப் பந்தம் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஒப்பந்தம் வாயிலாக விஐடி மாணவர் கள் மற்றும் பேராசிரியர் கள் ஆஸ்திரேலியா செல்ல வும் அப்பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர் களும் விஐடி பல்கலைக்கு வரவும் வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதன் வாயி லாக இரு பல்கலைக்கழகங் களுக்கிடையே கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ள வும் வழி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: