திருப்பூர், பிப். 25- தமிழகத்தில் தற்போது ரேசன் அரிசி கடத்தப்படு வது நாளுக்கு நாள் அதி கரித்துத் கொண்டே வரு கிறது. இதன் அடுத்த கட்ட மாக தற்போது ரயில்களில் ரேசன் அரிசி கடத்தப்படு வது அதிகரித்துள்ளது. தமிழக அரசு குடும்ப அட்டை உள்ள அனைவர் களுக்கும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் மூலம் விலையில்லா அரிசி வழங்கி வருகிறது. ஆனால், சிலர் மட்டுமே இதனை உணவு சமைக்க பயன்ப டுத்துகின்றனர். பெரும் பாலானோர், அரிசி வாங் கிய உடனே அதை பணத் திற்கு விற்றுவிடுகின்றனர். அவ்வாறு, பணத்திற்காக ரேசன் அரிசி வாங்குபவர் கள் அவற்றை சேமித்து வைத்து 100 கிலோ மூட் டையான பின், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கடத்தி விடுகின்றனர். சிலர், அரிசியை அரைத்து ‘ரெடி மேட்’ மாவாக விற்பனை யும் செய்து வருகின்றனர். சாலை வழியாக ரேசன் அரிசியை கடத்துவது தடுக்க போலீசார் பல் வேறு சோதனைகளை மேற்கொண்டு வருவதால் தினமும் ஏராளமான வாக னங்கள் மற்றும் ரேசன் அரிசி மூட்டைகள் டன் கணக்கில் பிடிபட்டு வரு கின்றன. இதனால் எச்சரிக்கை யான கடத்தல்காரர்கள், அரிசிகளை புதிய மூட் டைகளாகக் கட்டி அவற் றை ரயில்களில் மூலம் வெளி மாநிலங்களுக்கு கடத்துகின்றனர். சென் னையிலிருந்து கேரளா செல்லும் ரயில்கள், பாசஞ்சர் ரயில்களிலும், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. சுமார் 100 கிலோ முதல் 150 கிலோ எடையுள்ள மூட்டைகள் ரயில்களில் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு நாள் தோறும் கடத்தப்பட்டு வருகிறன்றன. இதனை கண்டுபிடிக்கும் ரயில்வே போலீசாரும் அவர்கள் மீது சரிவர நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், அவர்கள் சர்வசாதாரண மாக அரிசிகளை கடத்த துவங்கியுள்ளனர். இதுகுறித்து ரயில்வே காவல்துறையிடம் கேட்ட போது, ரயில்கள் ஒவ் வொரு ரயில் நிலையங்க ளில் நிற்கும் நேரத்தில் சோதனை செய்து தான் வருகிறோம். இருப்பினும், சில கடத்தல்காரர்கள் போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, சிறிய பை போன்றவற்றில் மறைத்து வைத்து ரேசன் அரிசியை கடத்திச் செல் கின்றனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.