ஆலங்குடி, பிப்.25- தமிழ்நாடு முழுவதும் நிலவிவரும் மின் வெட் டைக் கண்டித்து ஆலங் குடி பகுதி விவசாயி கள் கடந்த வாரம் போராட்ட ஆயத்தக் கூட்டம் நடத்தி னர்.அதே நாளில் பஸ் மறி யல் போராட்ட அறிவிப் பும் வெளியிடப்பட்டது. அதனையொட்டி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஆலங்குடி வடகாடு முக்கத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் முன் னாள் சட்டமன்ற உறுப் பினர் எஸ்.ராஜசேகரன் தலை மையில் அனைத் துக் கட்சி களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான விவ சாயிகள் பஸ் மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கை முழக்கத்தில் அந்தப் பகுதியே அதிர்ந் தது. மறியலால் போக்குவ ரத்து ஸ்தம்பித் தது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்டு அந்தப் பகுதியில் நின்று கொண் டிருந்த பொதுமக் களும் திரண்டு வந்து ஆதர வளித்தனர். மறியலில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுமே மின் வெட் டால் தாங்கள் படும் இன்னல்களை முழக்க மாக வெளிப்படுத்தினர். மேலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எட்டு மணிநேரமாவது மின்சா ரம் தரவேண்டும். அவ்வாறு தராவிட்டால் அரசே தங்க ளுக்கு விஷத்தையாவது தர வேண்டும் என்று ஆவேச மாகக் கூறினர். பின்பு அரசமரம் பேருந் துநிலையம், கே.வி.எஸ் தெரு வழியாக ஆயிரக்க ணக்கான விவசாயிகள் இறுதியாக மங்கள மகால் வந்தடைந்தனர். அங்கு போலீசார் அவர்களை கைது செய்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜசேக ரன், திருவரங்குளம் ஒன்றி யச்செயலாளர் கே.சிவக் குமார்,ரெ.வெள்ளைச்சாமி, எஸ்.ரெகுநாதன், ராஜலிங் கம், வாலிபர் சங்க திரு வரங்குளம் ஒன்றியச்செய லாளர் கே.தினேஷ்குமார், செந்தில் குமார், என்.தமிழ ரசன், ஆர். ரெத்தினகுமார், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மா.துரைக் கண்ணு மற்றும் விவசாயி கள் மேம்பாட்டுச் சங்கத் தைச்சேர்ந்த ரெ.சிவ சாமி சேர்வை,மாதவன், காங்கி ரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியக் கவுன் சிலர்கள் சிவசாமி, எ.செல் வம்,ம.தி.மு.கவைச் சேர்ந்த கா.லோகநாதன், எஸ்.குண சேகரன்,தே.மு.தி.கவைச் சார்ந்த சி.வினோத், நாம் தமிழர் இயக்கத்தைச் சார்ந்த ந.காசிலிங்கம் உள் பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட் டத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக வடகாடு, வெட் டன்விடுதி, கீரமங்கலம், ஆவணம் கை காட்டி, கீர னூர், ஆதனக் கோட்டை உட்பட பல இடங்களில் மறியல் போ ராட்டம் ஆயி ரக்கணக் கான விவசாயிக ளின் பங்கேற்புடன் நடை பெற்றது. மறியல் போராட் டத் தில் ஈடுபட்டவர் களை கைது செய்ததைக் கண்டித்தும், கைது செய்த வர்களை உட னடியாக விடுதலை செய்ய வேண் டும் என்றும் மார்க் சிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு வலியுறுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: