உலக சுகாதார நிறுவனமும், உலக வங்கியும் வெளியிட் டுள்ள அறிக்கையில் பல்வேறு வகையான ஊனங்களால் உல கம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 15 சதவிகிதம் இருக்கும் என தெரி வித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் சுமார் 40 லட்சம் பேர் இருக்கக் கூடும். இவர்களுக்கான அடை யாளச் சான்று இதுவரை மிகக் குறைவாகவே வழங்கப்பட் டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலைய அளவில் அடையாள சான்று வழங்கப்பட அரசாணை முறையாக செயல்படுத்தப்பட வில்லை. எனவே தமிழக அரசு கிராமப்புறங்களில் பஞ்சாயத்து அளவிலும், நகர்ப்புறங்களில் வார்டு அளவிலும் சிறப்பு முகாம்களை நடத்தி அடையாளச் சான்று அனைவருக்கும் கிடைக்கச் செய்திட வேண்டும். தமிழகத்தில் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலமும், மனவளர்ச்சிக் குன்றியோர் உள் ளிட்ட ஒரு சில கடும் ஊனமுற்றோருக்கு மாற்றுத் திறனாளி களின் நலத்துறை மூலமும் மாத பராமரிப்புத் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது. ஆனால் மாநில அரசு முன் வைத்துள்ள கடுமையான விதிமுறைகள் காரணமாக மாற்றுத் திறனாளிகள் பலவிதமான அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப் படும் நிலை உள்ளது. எனவே பராமரிப்புத் தொகை பெறுவ தற்கு வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத் தில் நடைமுறையில் உள்ள கடும் நிபந்தனைகளும், விதி முறைகளும் நீக்கப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அனை வருக்கும் பராமரிப்புத் தொகை ரூ. 1,000 வழங்குவதை தமி ழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும், அனைத்து வறுமை ஒழிப்புத் திட்டங் களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் ஒதுக்கப்பட வேண்டுமென்று ஊனமுற்றோருக்கான சமவாய்ப்புச் சட்டம் (1995) உள்ளது. ஆனால் இந்த ஒதுக்கீடுகள் மறுக்கப்பட்டே வருகிறது. நீதிமன்றங்களுக்கு சென்றே சட்டம் அளித்துள்ள சமூக நீதியை பெற வேண்டிய கட்டாயத்திற்கு மாற்றுத் திற னாளிகள் தள்ளப்படுகின்றனர். சத்துணவுப் பணி காலியிடங் களை நிரப்புவதில், இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தில், தேசியஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. எனவே 3 சதவிகித இட ஒதுக்கீட்டை மாற்றுத் திறனாளிகள் பயன்பெறத்தக்க வகை யில் தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் சட்டப்படியான உரிமைகளை யும் அரசின் திட்டங்களையும் கண்காணிக்க அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளின் பிரதிநிதிகள் இடம் பெறக் கூடிய மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழு ஊனமுற் றோர் சமவாய்ப்புச் சட்டப் படி செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் செயல்படுத்தப்படவில்லை. மாவட்ட ஒருங்கிணைப் புக்குழுக்களை அமைப்பதற்கு 2011 பிப்ரவரியில் கொண்டு வரப்பட்ட அரசாணையும் செயல்படுத்தப்படவில்லை. அதுபோல் அஇஅதிமுக அரசு பதவியேற்ற பிறகு ஊன முற்றோர் நலவாரியக் கூட்டம் ஒரு முறை கூட நடத்தப்பட வில்லை. எனவே தமிழக அரசு சட்டப்படியான கண்காணிப்புக் குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும். நலவாரி யத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். மேலும், மன வளர்ச்சி குன்றிய மற்றும் காது கேளாத இளம் பெண்கள், சிறுமி கள் மீது பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இக்குற்றங்களில் ஈடுபடும் கயவர்களை தண்டிக்க பிரத்யேக சட்டத்தை இயற்ற தமிழக அரசும், மத்திய அரசும் முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தமிழ்நாடு மாநில மாநாடு வலியுறுத்துகிறது. தே. இலட்சுமணன் இத்தீர்மானத்தை முன்மொழிய, பா. ஜான்சிராணி வழிமொழிந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.