மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் தேர்வு நாகப்பட்டினம், பிப். 25 – மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக ஜி. ராம கிருஷ்ணன் மீண்டும் ஒருமன தாக தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20வது தமிழ்நாடு மாநில மாநாடு பிப்ரவரி 22-25 தேதிகளில் நாகப்பட்டினத் தில் நடைபெற்றது. இம்மாநாட் டில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எஸ். ராமச் சந்திரன்பிள்ளை, கே.வரதராசன், பிருந்தா காரத், பி.வி.ராகவலு, மாநிலச் செயலாளர் ஜி. ராம கிருஷ்ணன், மத்தியக் கட்டுப் பாட்டுக்குழுத் தலைவர் என். சங்கரய்யா, மத்தியக்குழு உறுப் பினர்கள் என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., ஏ.கே. பத்மநாபன், உ. வாசுகி, சுதா சுந்தரராமன் உள் ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப் பினர்கள் மற்றும் தமிழகம் முழு வதிலுமிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இம் மாநாட்டில் புதிதாக 79 பேர் கொண்ட மாநிலக்குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட் டனர். மாநாட்டு தலைமைக் குழு தலைவர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்ற மாநிலக்குழுக் கூட்டத்தில் மாநிலச் செயலாளராக ஜி. ராம கிருஷ்ணன் மீண்டும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட் டார். 15 பேர் கொண்ட மாநில செயற்குழுவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. மாநாட் டில் அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகளாக 49 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave A Reply