வெண்மணி நகர்(நாகை), பிப்.25- தமிழகத்தில் புறக் கணிக்க முடியாத அரசியல் சக்தியாக மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியை மாற்று வோம் என்று நாகையில் நடைபெற்ற 20வது மாநில மாநாட்டில் மாநிலச் செய லாளராகத் தேர்வு செய்யப் பட்ட ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். சனிக்கிழமையன்று பிற் பகல் மாநில மாநாடு நிறை வடைந்தவுடன் பத்திரிகை யாளர் சந்திப்பு நடைபெற் றது. இதில் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக ஜி. ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டதை மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் அறிவித்தார். இதையடுத்து பத்திரிகை யாளர்களிடம் ஜி.ராம கிருஷ்ணன் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் முக்கிய மான பல முடிவுகள் எடுக் கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய அரசின் நவீன தாராளமயக் கொள்கை, மாநில அரசு பின்பற்றும் மக்கள் விரோதக் கொள்கை களுக்கு எதிராக மார்ச் 27ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலு வலகங்களுக்கு முன்பாக லட்சம் பேர் பங்கேற்கும் மறியல் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் 79 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. இம்மாநிலக்குழு கூடி மாநி லச் செயலாளர் மற்றும் 15 பேர் கொண்ட மாநில செயற் குழுவை ஏகமனதாகத் தேர்வு செய்தது. தமிழக மக் களின் நலனுக்குத் தொடர்ந்து பாடுபட்டு வரும் மார்க் சிஸ்ட் கட்சியை தமிழகத் தில் புறக்கணிக்க முடியாத சக்தியாக மாற்றுவது என்று இம்மாநாட்டில் தீர்மானிக் கப்பட்டது. நாகையில் கட்சியின் மாநில மாநாடு வெகு சிறப் பாக நடைபெற்றது. இம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த நாகை மாவட்ட கட்சி அணிகளுக் கும், மக்களுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். இப்பேட்டியின்போது ஏ.வி.முருகையன், வி.மாரி முத்து ஆகியோர் உடனிருந் தனர். (மறியல் தொடர்பான மாநில மாநாட்டு தீர்மானம் 3ம்பக்கம்)

Leave a Reply

You must be logged in to post a comment.