வெண்மணிநகர், (நாகப்பட்டினம்),பிப்.25- மக்கள் வாழ்வைச் சீரழிக்கும் நவீன தாராளமயக்கொள்கைகளை கைவிடக்கோரி மார்ச் 27ம் தேதி தமி ழகத்தில் மறியல் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர் மானித்துள்ளது. நாகப்பட்டினத்தில் நடைபெற்ற 20வது மாநில மாநாட்டில் இந்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:- கடந்த 20 ஆண்டுகளாக பின் பற்றப்படும் நவீன தாராளமயக் கொள்கைகள், ஏழை எளிய உழைப் பாளர்கள், விவசாயிகள், சிறு உட மையாளர்கள், வியாபாரிகள், நடுத் தரப் பிரிவினர் என எல்லாப் பிரிவி னரையும் புரட்டிப்போட்டு விட் டன. பெரும் முதலாளிகள், அந்நிய முதலாளிகள் மற்றும் வர்த்தகச் சூதாடிகள்தான் பெரும்பலன் பெற் றுள்ளனர். மாநிலத்தை மாறி மாறி ஆண்டு வருகிற திமுக, அதிமுக அர சுகள் இந்தக் கொள்கைகளை அப் படியே ஏற்றுப் பின்பற்றி வருகின்றன. அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாடற்ற விலையேற்றங்கள், பெட்ரோல், டீசல், எரிவாயு போன் றவற்றிற்கு மத்திய அரசே உருவாக்கி வரும் விலை உயர்வுகள் கடுமையான தொடர் பாதிப்புகளை உண்டாக்கி வருகின்றன. மத்திய அரசு மலிவு விலையிலும், இலவசமாகவும் உணவு தானியங்களை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். இதற்குத் தேவையான பொது விநியோக முறையைப் பலப்படுத்தவும், இதை எல்லோருக்கும் பொருந்தச் செய்ய வும், மத்திய அரசு மறுத்து வருகிறது. உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்ந்த போதும் வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுப்படி யான விலை தர மறுக்கப்படுகிறது. தண்ணீரையும் வியாபாரப் பொரு ளாக மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மாறாக பெருமுதலாளி களுக்கு மத்திய அரசு சலுகைகளை வாரி வழங்குகிறது. இதில் வஞ் சனைப் போக்கையும், தவறான அணுகுமுறைகளையுமே மத்திய அரசு பின்பற்றுகிறது. தமிழகத்தில் கடும் விலையேற் றத்திற்கு எதிராக மக்கள் போராடிய போது, மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்துவிட்டது என்று மலிவான பொய்யை முந்தைய ஆட்சியும், இப் போதைய ஆட்சியும் கூறுவதுதான் பெரும் வேதனையாகும். பஸ் கட் டணமும், பால்விலையும் கடுமை யாக உயர்த்தப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும். மின்சாரக் கட்டணத்தையும் உயர்த் தியே தீருவோம் என்று அரசு அறி விக்கிறது. தமிழகத்தை மாறி, மாறி ஆண்டவர்கள் கல்வியைக் கடைச் சரக்காக்கிவிட்டனர். தாங்க முடியாத கல்விக்கட்டணக் கொள்ளை தொட ருகிறது.மின் உற்பத்திக்கு முன் னுரிமை தராத அரசுகளால் இப் போது தமிழகம் மின்வெட்டால் பெரும் நாசத்தைச் சந்திக்கிறது. சில் லரை வர்த்தகத்தில் அந்நிய மூல தனத்தை அனுமதிக்கும் முடிவால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிப்படையும். இலவச மருத்து வத்தை அரசு மருத்துவமனை மூலம் வழங்குவதை படிப்படியாகக் குறைத்து வருகிறார்கள். இருக்கும் மருத்துவமனைகளை சீர்கெடுத்தும் தனியார் மருத்துவமனைக்கு ஊக்கம் தரப்படுகிறது. சிறப்புமருத்துவத் திட் டம் வரவேற்கத்தக்கது என்றாலும் அது தீர்வாகாது. நோய்த் தடுப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள், பாதுகாக்கப் பட்ட குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, கொசுக்கள் ஒழிப்பு, சாக்கடை வசதி கள், கழிப்பிட வசதி போன்றவையும் சாலை வசதிகளும் அரசின் நடவடிக் கையில் உயர் முன்னுரிமை பெற வேண்டும். தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி, பனியன் உள்ளிட்ட ஜவுளித் தொழில் கடும் பாதிப்பில் உள்ளது. மின்வெட் டால் விவசாயமும், சிறு, குறு தொழில்களும் நசிந்து வருகின்றன. பீடி, பட்டாசு, தீப்பெட்டி, தாட்டம், உப்பளம், பனை, கைத்தறி போன்ற பாரம்பரியத் தொழில்கள் நெருக் கடியின் பிடியில் திணறுகின்றன. இந் தப் பகுதிகளில் பெரும் வேலை யிழப்புகள் ஏற்படுகின்றன. பாரம் பரியத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும். வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கு ஏற்ற தொழிற் கொள் கைகளும், சிறு குறுந்தொழில் களைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளை யும் அரசு செய்ய வேண்டும். அரசு மற் றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. பெரும் தொழிற்சாலைக ளிலும் ஒப்பந்தக்கூலி முறை போன்ற கொடுமையான சுரண்டல் தீவிரம் அடைந்து வருகிறது. தொகுப்பூதி யம், மதிப்பூதியம் போன்றவற்றில் அரசே ஈடுபடுகிறது. தொழிலாளர்கள் சங்கம் வைக் கும் உரிமையும் மறுக்கப்படுகிறது. தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் இயற்றவும், தொழிலாளர்களின் கூட் டுப் பேர உரிமையை உறுதிப்படுத்த வும் வேண்டும். குறைந்தபட்ச ஊதி யம் ரூ. 10,000 என்று சட்டமியற்றப் பட வேண்டும்.அரசுத் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.விவசாயத் தொழிலாளர் களுக்கு வேலை உறுதித்திட்ட நாட்க ளையும், ஊதியத்தையும் கூடுதலாக்க வேண்டும். நிலச்சீர்திருத்தச் சட்டத்தை கறா ராகச் செயல்படுத்தி, உபரி நிலங் களை நிலமற்ற விவசாயிகளுக்கு விநி யோகிக்க வேண்டும். காவல்துறை ஜனநாயக உரிமை களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பரமக்குடி துப் பாக்கிச் சூடு,சேலம் தடியடி போன் றவையும், ஊர்வலம், உண்ணா விரதம், ஆர்ப்பாட்டம் போன்ற இயக்கங்களை தொடர்புள்ள இடங் களில் நடத்த அனுமதி மறுப்பதும் சில உதாரணங்கள். லாக்-அப் படு கொலைகள் தொடருகின்றன. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலி யல் வன்முறை போன்றவை பெருகி விட்டன. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி களின் உரிமைகள் மறுக்கப்படுகின் றன. குடிமனையும், குடிமனைப் பட் டாவும் கோருகிற பல லட்சம் ஏழை எளியோரின் பிரச்சனைகளை அரசு தட்டிக்கழிக்கிறது. தேவையான வகை மாற்றங்கள் செய்து பட்டா வழங்க வேண்டும். மடம் மற்றும் கோவில் மனைகளில் பாரம்பரிய மாக வாழ்ந்து வருவோருக்கு அந்த மனைகளைச் சொந்தமாக்க வேண் டும். மடம்,கோவில் நிலங்களில் பயிர் செய்து வரும் விவசாயிகளுக்கே அந் நிலங்களை உரிமையாக்க வேண்டும். வன உரிமைச் சட்டம்- 2006ஐ உடனடியாக அமல்படுத்தி ஆதிவாசி மக்களுக்கு நில உரிமையும், வன உரிமையும் வழங்க வேண்டும்.தானே புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் பயிர்க்கடன்களை முழுமை யாக ரத்து செய்ய வேண்டும். தீண் டாமை சட்டவிரோதம் என அர சியல் சட்டத்தில் கூறப்பட்டிருந் தாலும் தீண்டாமைக் கொடுமைகள் இப்போதும் பல வடிவங்களில் தொடர்கிறது. பாலின சமத்துவம் அரசியல் சட்டத்தில் உறுதி செய் யப்பட்டிருந்தாலும் தேர்ந்தெடுக் கப்பட்ட மன்றங்களிலேயே அது மறுக்கப்படுகிறது. மத்திய அரசின் நவீன தாராளமய, பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், மாநில அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்தும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் 2012, மார்ச் மாதம் 27 அன்று மாநிலம் தழுவிய மறியல் போராட் டம் நடைபெறுகிறது, இப்போராட் டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்தை டி.கே. ரங்க ராஜன் எம்.பி., முன்மொழிந்தார். ஜி. ராமகிருஷ்ணன் வழிமொழிந்தார்.

Leave A Reply

%d bloggers like this: