கூடலூர், பிப். 25- பிப். 28-ல் நடைபெற இருக்கும் வேலைநிறுத் ததை விளக்கி கூடலூரில் பொதுத்துறை ஊழியர்கள் பேரணியாக சென்றார்கள். தமிழகத்தில் தொடர்ச் சியான மின்வெட்டை நீக்க வேகமாக நடவ டிக்கை எடுக்க வேண்டும், அரசு ஊழியர்கள், ஆசிரி யர்களுக்கு பணி இடங் களில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், கூட லூர், பந்தலூர் ஆகிய வட் டாரங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிக ளில் உள்ள காலியாக உள்ள அனைத்து பணி யிடங்களையும் தமிழக அரசு உடனே நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி கூட லூரில் மத்திய-மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பேரணியும், அதைத் தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடந்தது. பேரணி கூடலூர் வட் டாச்சியர் அலுவலகம் முன்பு இருந்து தொடங் கியது. இதற்கு ஒருங்கி ணைப்பு குழுத் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கி னார். பேரணியை தமிழ் நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத் தின் செயலாளர் சிவராஜ் தொடங்கி வைத்தார். பேரணி பேருந்து நிலையம் வழியாக காந்தி திடலை அடைந்தது. பின் னர் அங்கு பொதுக்கூட் டம் நடந்தது. கூட்டத் துக்கு ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். கருணாநிதி வரவேற்று பேசினார். தங்கராஜ், பெரி யசாமி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன், நெடுஞ் சாலைத்துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் குமார், நீலகிரி மாவட்ட தோட்டத் தொழி லாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சுரேஷ் ஆகி யோர் 28-2-2012 அன்று நடக்க இருக்கும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். ஒருங்கி ணைப்பு குழு அன்பழகன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: