கோவை, பிப். 25- அடுக்குமாடி குடியி ருப்புகளுக்கு கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைப்புப்படும். இதன் மூலம் 100 எம்பிபிஎஸ் அலைகற்றை வரை அதி வேக இன்டர்நெட் வச தியை பெற முடியும் என் பது போன்ற பல்வேறு இலவச சலுகைகளை பிஎஸ்என்எல் கோவை முதன்மைப் பொதுமேலா ளர் ஹரிபாபு செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். பிஎஸ்என்எல் நிறுவ னத்தின் மூலம் அகண்ட அலைவரிசை (பிராட் பேண்ட் ) மற்றும் லேண்ட் லைன் சிறப்பு சலுகை களை அறிமுகப்படுத்திய பின்னர் அவர் தெரிவித்த தாவது, புதியதாக பிராட் பேண்ட் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்க ளுக்கு ஒரு செல்போன் சிம் இலவசமாக வழங்கப் படும். அதேபோல், புதி தாக வாங்கப்படும் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு பிராட்பேண்ட் இணைப்புகளை நிறுவுவ தற்காக பெறப்படும் நிர்மா னக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். சொந்தமாக மோடம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ப்ரீபெய்டு இணைப் பிற்கான செயலாக்கம் மற் றும் நிர்மானக் கட்டணம் ஏதும் பெறப்படாது. மேலும், வாடிக்கையா ளர் கணக்கில் 15 நாள் கால வரம்புடன் கூடிய 100 எம்.பி.க்கான டேட் டாவை உபயோகிக்கலாம். இதற்காக எவ்வித கட்ட ணமும் வசூலிக்கப்ப டாது. தொலைபேசி கரு வைய சொந்தமாக தேர்வு செய்யும் வாடிக்கையா ளர்களுக்கு 300 அழைப்பு கள் இலவசமாக வழங்கப் படும் என்றார். தொடர்ந்து பேசுகை யில், கோவை மாவட்டம் முழுவதும் சீரான முறை யில் அலைவரிசை (டவர்) கிடைக்கும் வகையில், 578 2ஜி டவர்களும், 250 3ஜி டவர்களும் நிறுவப்பட் டுள்ளது. மேலும், 77 டவர் கள் இன்னும் 6 மாத காலத் திற்குள் அமைக்கப்படும். அதேபோல், கோவை மாவட்டத்தில் 12 இடங்க ளில் கம்பியில்லா பிராட் பேண்ட்டுக்கான கருவி கள் அமைக்கப்பட்டுள் ளது. அடுக்குமாடி குடியி ருப்புகளுக்கு கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைப்பு தரப்படும். இதன் மூலம் 100 எம்பி பிஎஸ் அலைகற்றை வரை அதிவேக இன்டர்நெட் வசதி வழங்கப்படுகிறது. இந்த இணைப்பிற்கு ரூ.550 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது வரை 22 குடியிருப்புக ளுக்கு இவ்வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இச்சலுகைகளை பொதுமக்கள் நன்கு பயன் படுத்திக் கொள்ள வேண் டும் என்று அவர் தெரி வித்தார். சேலம்: இது குறித்து சேலம் தொலை தொடர்பு பொது மேலாளர் தெரிவிக்கை யில்: சேலம் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2ஜி மற்றும் 3ஜி பிரிபெய்டு வாடிக்கையா ளர்களுக்கு ரூ. 200 இருந்து ஆயிரத்து 100 வரையி லான டாப்அப் வவுச்சர்க ளுக்கு முழு டாக்டைம் அளிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை பிப். 25ம் தேதி வரை செய்படும். 1ஜிபி இலவச டவுண்லோடுக ளுக்கு மேற்பட்ட 3ஜி போஸ்ட் பெய்டு, டேட்டா பிளானுக்கு 50 சதவிகிதம் கூடுதல் டவுன்லோடு செய் யலாம். இச்சலுகை பிப். 31ம்தேதி வரை வழங்கப் பட்டுள்ளது. இதில் பெ1ட் வேல்யூ பிளான் 369, பிளான் 549, பிளான் 1133, பிளான் 1633, பிளான் 2039 மற்றும் ஐ-பேட் டேட்டா பிளான் உள்ளிட்டவை அடங்கும். மேலும் இது தொடர்பான விபரங்க ளுக்கு அருகிலுள்ள பிஎஸ் என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுக லாம் என தெரிவித்துள் ளார்.

Leave A Reply

%d bloggers like this: