1960 ரோம் ஒலிம்பிக் என்றவுடன் இந்தியாவின் ஹாக்கி தோல்வி நினைவுக்கு வருவது போல் மில்கா சிங்கும் நினைவுக்கு வருவார். ஆம் அவர் நூலிழையில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்டார். தங்கப் பதக்கத்தையே தவற விட்டேன் என்று இன்றும் அவர் வருத்தப்படுகிறார். ரோம் ஒலிம்பிக்கில் 400 மீ இறுதி ஓட்டத்தில ஓடிய ஆறு பேரும் சாதனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவதாக வந்த மில்கா சிங் உள்ளிட்ட முதல் நால்வரும் முந்தைய ஒலிம்பிக் சாதனையை முறியடித்தனர். மற்ற இருவரும் அதனுடன் சமப்படுத்தினர். 1958 ஆசியாட் போட்டிகளில் மில்கா சிங் தங்கம் வென்றார். அதே ஆண்டில் எம்பயர் கேம்ஸ் என்று அன்று அறியப்பட்ட காமன்வெல்த் போட்டிகளில் மில்கா சிங் தங்கப்பதக்கம் வென்றார். ஐரோப்பிய தடகளங்களில் அவர் மிரட்சியை உண்டுபண்ணினார். பிரான்ஸ் பந்தயம் ஒன்றில் மில்காசிங் 400மீ ஓட்டத்தில் உலகச் சாத னையான 45.8 வினாடியை ஈடுசெய்தார். அதனால் அவருடைய இந்தியக் கூட்டாளிகள் ரோமில் தங்கம் வெல்வார் என்று கூறினர். தன்னுடைய தவறான வியூகத்தால் தங்கத்தை இழந்ததாக அவர் கூறியுள்ளார். 1960 ஒலிம்பிக் 400 மீ இறுதி ஓட்டத்தில் மில்காசிங் ஐந்தாம் தடத்தில் நின்றார். ‘ஆன் யுவர் மார்க்’ என்று நடுவர் கூறியவுடன் தரையில் மண்டியிட்டு பூமித்தாயை அவர் வணங்கினார். துப்பாக்கியில் தொனி வெடித்தவுடன் ஆறு பேரும் அம்பெனப் பாய்ந்தனர். 250 மீட்டர் வரை மில்கா சிங் முன்னிலை வகித்தார். எங்கே இறுதிக் கட் டங்களில் சக்தி தீர்ந்து விடுமோ என்று கருதிய மில்கா வேகத்தைக் குறைத்தார். இதுதான் அவர் செய்த தவறு. 300 மீட்டரில் அவருக்குப் பின் னால் வந்தவர்கள் அவரை முந்தத் தொடங்கினர். கடைசி 100 மீட்டர் வரை முதலில் தான் இழந்த 15/20 அடிகளை அவரால் ஈடு செய்ய முடியவில்லை. மூன்றாவது வந்தவரும் மில்கா சிங்கும் ஒரே நேரத்தில் வெற்றி எல்லையைத் தொட்டனர். புகைப்பட முடிவு (ஞழடீகூடீ குஐசூஐளுழ) என்பதால் படங்கள் கழுவி வரும் வரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. முடிவு அறிவிக்கப்பட்ட போது மில்காவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தன்னுடைய வாழ்நாளில் இந்திய தடகள வீரர் தங்கம் பெறுவதைக் காண இன்றும் மில்காசிங் காத்திருக்கிறார்.

Leave A Reply