பந்தலூர், பிப். 25- நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த சேரம் பாடி வனச்சரகத்திற்கு உட் பட்ட பகுதியில் தனியார் தேயிலை எஸ்டேட்டுகளும் அதிக அளவில் உள்ளன. கையுண்ணி வெலக் காடி பகுதியில் வனப் பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட் டது. வனத்தில் பற்றிய தீ மள மளவென அருகில் வனத்தை ஒட்டியிருந்த தேயிலைத் தோட்டத்திற்கு பரவியது. ஏற்கனவே உறைபனி காரணமாக தேயிலைச் செடிகள் பசுமை குறைந்து வறட்சியுடன் காணப் படு கின்றன. தீ வேகமாக பரவி யதில் தேயிலை செடிகள் முற்றிலும் எரிந்து சாம்ப லாயின. 3 மணி நேரம் எரிந்த இந்த காட்டுத் தீயால் எஸ் டேட்டில் அரசு மானியத் துடன் பெறப்பட்டு நடப் பட்டிருந்த சில்வர் ஓக் மரங்கள், குறுமிளகுச்செடி கள், காப்பி செடிகள், பாக்கு மரங்கள் மற்றும் தென்னை மரங்களும் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் தீய ணைப்பு படையினர் சம் பவ இடத்துக்கு சென்ற னர். அதற்குள் தேயிலை தோட்டம் முழுமையாக தீயில் கருகி சாம்பலானது. தீ விபத்தால் பல லட் சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட் டுள்ளதாக எஸ்டேட் உரி மையாளர் சஜி ஜார்ஜ் தெரிவித்தார்.

Leave A Reply